டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு விண்ணப்பம் வழங்காததால் மாணவிகள், பெற்றோர்கள் சாலை மறியல்
தூத்துக்குடியில் டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு விண்ணப்பம் வழங்காததால் மாணவிகள், பெற்றோர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு நேற்று முன்தினம் முதல் அரசு மருத்துவக்கல்லூரியில் விண்ணப்பங்கள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விண்ணப்பங்கள் வாங்குவதற்காக மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் நேற்று முன்தினம் வந்தனர். ஆனால் விண்ணப்பங்கள் மருத்துவக் கல்லூரிக்கு வராததால், மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதனால் ஏமாற்றத்துடன் திரும்பிய மாணவிகள் நேற்று காலையில் மீண்டும் விண்ணப்பங்கள் வாங்குவதற்காக வந்தனர். அப்போதும் விண்ணப்பங்கள் வரவில்லை.
சாலை மறியல்
இதனால் ஏமாற்றம் அடைந்த மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், 2 நாட்களாக விண்ணப்பம் வழங்காமல் அலைக்கழிக்கப்படுவதாக கூறி 3–வது மைல் அருகே தூத்துக்குடி–பாளையங்கோட்டை ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு விண்ணப்பம் வாங்க வந்தவர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 125 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இன்று(வெள்ளிக்கிழமை) டோக்கனை காண்பித்து விண்ணப்பங்களை பெற்று செல்வதற்கு அறிவுறுத்தப்பட்டனர். அதன்பிறகு மாணவிகள் கலைந்து சென்றனர்.