குமரி மாவட்டத்தில் மழை: பாலமோர் பகுதியில் 15 செ.மீ. பதிவு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 15 செ.மீ. மழை பதிவானது. இதைத்தொடர்ந்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2017-10-12 22:00 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி மற்றும் பாலமோர் உள்பட சில பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 15 செ.மீ. பதிவாகியிருந்தது.

குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு மி.மீ. வருமாறு:–

பூதப்பாண்டி– 36.2, சுருளோடு– 6.2, கன்னிமார்– 16.2, திற்பரப்பு– 61.4, புத்தன்அணை– 18.2, முள்ளங்கினாவிளை– 4, ஆரல்வாய்மொழி– 2 என்ற அளவில் மழை பதிவாகியிருந்தது. இதுபோல அணை பகுதிகளில், பேச்சிப்பாறை– 29.4, பெருஞ்சாணி– 19.8, சிற்றாறு 1– 35.2, சிற்றாறு 2– 33.8, பொய்கை– 2, மாம்பழத்துறையாறு– 3 என்ற அளவில் மழை பெய்திருந்தது.

நாகர்கோவில் நகரில் நேற்று பகல் திடீரென மழை பெய்தது. சடசடவென பெய்ய தொடங்கிய மழை சில நிமிடங்கள் நீடித்தது.

நீர்வரத்து அதிகரிப்பு

அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளதால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அதாவது பேச்சிப்பாறை அணைக்கு நேற்று முன்தினம் 428 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. ஆனால் நேற்று நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 928 கனஅடியாக உயர்ந்து உள்ளது. இதுபோன்று 157 கனஅடி வீதம் தண்ணீர் வந்த பெருஞ்சாணி அணைக்கு 913 கனஅடி வீதமும், சிற்றாறு 1 அணைக்கு 112 கனஅடி வீதமும், சிற்றாறு 2 அணைக்கு 19 கனஅடி வீதமும், மாம்பழத்துறையாறு அணைக்கு 1 கனஅடி வீதமும் தண்ணீர் வருகிறது.

மேலும் செய்திகள்