நள்ளிரவில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து சூறையாடிய கும்பல் ரூ.7 லட்சம் மதுபாட்டில்கள் நாசம்
திண்டுக்கல் அருகே நள்ளிரவில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மர்ம கும்பல் சூறையாடியதில், ரூ.7 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் நாசமாகின.
திண்டுக்கல்,
திண்டுக்கல் அருகேயுள்ள கொட்டப்பட்டி பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வந்தது. இதற்கு கொட்டப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி, மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி பொன்மாந்துறை அருகே டி.புதூருக்கு, அந்த மதுக்கடை மாற்றப்பட்டது. அங்கு தனியாருக்கு சொந்தமான இடத்தில் மதுக்கடை அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை அந்த மதுக்கடை திறக்கப்பட்டது. இரவு மது விற்பனை முடிந்ததும், ஊழியர்கள் மதுக்கடையை பூட்டிவிட்டு சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று காலை மதுக்கடை மேற்பார்வையாளர் ஆறுமுகம் கடையை திறக்க சென்றார். அங்கு கண்ட காட்சி அவரை அதிர்ச்சி அடைய வைத்தது.
மதுக்கடையின் முன்பு மதுபாட்டில்கள் பெட்டி, பெட்டியாக உடைக்கப்பட்டு கிடந்தன. மதுக்கடை வளாகம் முழுவதும் மதுபாட்டில்கள் உடைந்து நொறுங்கி கிடந்தன. மேலும் மதுக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, ஷட்டர் திறந்து கிடந்தது. ஏராளமான மதுபாட்டில்கள் திருடு போய் இருந்தன. இதுபற்றி திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டு, விசாரணையை முடுக்கி விட்டார். விசாரணையில், நள்ளிரவில் பூட்டை உடைத்து மதுக்கடைக்குள் ஒரு கும்பல் புகுந்து மதுபாட்டில்கள் இருந்த பெட்டிகளை வெளியே தூக்கிவந்து போட்டு உடைத்தது தெரியவந்தது.
இதில் சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் நாசமாகி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மதுக்கடையின் பூட்டை உடைத்து சூறையாடிய மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவிட்டார். அதன்பேரில் திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூறையாடப்பட்ட மதுக்கடை கொட்டப்பட்டியில் இருந்த போதே மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். டி.புதூரில் மதுக்கடை திறக்கப்பட்ட தினமே நள்ளிரவில் சூறையாடப்பட்டு இருக்கிறது. அதேநேரம் ஏராளமான மதுபாட்டில்கள் திருடு போயிருக்கின்றன. எனவே, மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சூறையாடப்பட்டதா? அல்லது மர்ம கும்பல் மதுபாட்டில்களை திருடிக் கொண்டு, போலீசாரை திசைதிருப்ப மதுபாட்டில்களை உடைத்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.