நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2017-10-12 23:30 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை உணவு பாதுகாப்புத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஓட்டல் சங்கம் ஆகியவை இணைந்து திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். அதைத் தொடர்ந்து டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

இதில் திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, நகராட்சி ஆணையர் பாரிஜாதம், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் செந்தில், ஓட்டல் சங்க மாவட்டத் தலைவர் மண்ணுலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு கொசு ஒழிப்பு உறுதிமொழி கலெக்டர் தலைமையில், மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்.


மேலும் செய்திகள்