மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்தில் சாரண, சாரணியர் இயக்க பயிற்சி முகாம்
கீழ்பென்னாத்தூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் சாரண, சாரணியர் இயக்க அறிமுக பயிற்சி முகாம் நடந்தது.
திருவண்ணாமலை,
கீழ்பென்னாத்தூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் சாரண, சாரணியர் இயக்க அறிமுக பயிற்சி முகாம் நடந்தது. முகாமுக்கு நிறுவன முதல்வர் ப.ராமலிங்கம் தலைமை தாங்கினார். சாரண சாரணியர் இயக்க மாவட்ட செயலாளரும், மாவட்ட பயிற்சி ஆணையருமான ஜி.கே.பியூலா முன்னிலை வகித்தார். விரிவுரையாளர் ரா.சிவக்குமார் வரவேற்றார்.
மாவட்ட அமைப்பு ஆணையர் எம்.தட்சிணாமூர்த்தி பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். இதில் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை நிறுவன சாரண, சாரணியர் ஒருங்கிணைப்பாளர் ப.குமரன் செய்திருந்தார்.