சாராயம் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது
நெமிலி தாலுகா பொன்னம்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் என்ற கிச்சிலி (வயது 49).
வேலூர்,
நெமிலி தாலுகா பொன்னம்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் என்ற கிச்சிலி (வயது 49). சாராயம் விற்றது தொடர்பாக இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு காவேரிப்பாக்கம் போலீசார் கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
வெங்கடேசன் தொடர்ந்து சாராயம் விற்று வந்ததால் அவரை போலீஸ் சூப்பிரண்டு பகலவன் குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி கலெக்டர் ராமனுக்கு பரிந்துரை செய்தனர். அதன்பேரில் வெங்கடேசனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யும்படி கலெக்டர் உத்தரவிட்டார்.
இதையடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையின் நகலை ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் வெங்கடேசனிடம் போலீசார் வழங்கினர்.