சிங்கம்புணரியில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையால் விபத்து அபாயம் செப்பனிட கோரிக்கை
சிங்கம்புணரியில் உள்ள சாலைகள் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள முக்கிய சாலைகள் பலவும் பழுதடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகின்றன. தார்ச்சாலைகளில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. இந்த சாலைகளில் வாகன ஓட்டிகள் செல்லும்போது ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். சேதமடைந்த சாலையால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன.
குறிப்பாக வேட்டையன்பட்டியில் உள்ள என்பீல்டு சாலை, அண்ணாநகர் சாலை, கீழக்காட்டு ரோடு, பாரதிநகர் மற்றும் அரசு ஆஸ்பத்திரி செல்லும் சுந்தரம் நகர் சாலை ஆகியவை பொதுமக்கள் அதிக அளவு சென்று வரும் சாலைகள். ஆனால் இந்த சாலைகளில் தான் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக விபத்து ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைபேசி நிறுவனம் சார்பில் சாலையோரம் குழி தோண்டி கேபிள் பதித்தனர். ஆனால் குழிகள் தோண்டப்பட்ட பல நாட்கள் ஆகியும் அவை சரிவர மூடப்படாததால் திண்டுக்கல்-காரைக்குடி சாலையோரத்தில் பள்ளங்களாக காட்சி அளிக்கின்றன. இந்த பள்ளங்கள் தற்போது பெரிதாகி உயிர் பலி கேட்கும் நிலையில் உள்ளன.
குறிப்பிடும்படியாக சேவுகப்பெருமாள் கோவில் தேரோடும் சாலை, அண்ணாநகர் போன்ற முக்கிய இடங்களில் இந்த பள்ளங்கள் இருப்பதால் விபத்து அபாயம் உள்ளது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக சாலைகள் மேலும் மோசமாக காணப்படுகின்றன.
எனவே சிங்கம்புணரியில் சேதமடைந்து காணப்படும் முக்கிய சாலைகளை செப்பனிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.