புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு
புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் திருச்சி உள்பட 3 மாவட்டங்களில் 42,776 ஏக்கர் பாசன வசதி பெறும்.
திருச்சி,
திருச்சி, அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று காவிரியின் கிளை வாய்க்கால்களான புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில் திருச்சி முக்கொம்பு மேலணையில் காவிரியின் இடபுறம் வாத்தலை பகுதியில் இருந்து பிரியும் புள்ளம்பாடி வாய்க்காலில் நேற்று காலை தண்ணீர் திறந்து விடப்பட்டது. அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், அரியலூர் மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா, மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. பரமேசுவரி முருகன், லால்குடி வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், பொதுப்பணித்துறை ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் கணேசன், உதவி செயற்பொறியாளர் பாஸ்கர் ஆகியோர் தண்ணீரை திறந்து விட்டனர். மதகுகளின் வழியாக சீறிப்பாய்ந்த தண்ணீரை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.
புள்ளம்பாடி வாய்க்காலின் மொத்த நீளம் 90.20 கி.மீ ஆகும். இந்த வாய்க்காலின் மூலம் திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நேரடி பாசனமாக 8 ஆயிரத்து 831 ஏக்கர் நிலம், 28 குளங்கள் மூலம் 13 ஆயிரத்து 283 என மொத்தம் 22 ஆயிரத்து 114 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நேற்று வினாடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. விரைவில் வினாடிக்கு 400 கன அடிவரை தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையில் காவிரி ஆற்றின் வலது கரையில் இருந்து புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இந்த வாய்க்கால் கரூர் மாவட்டத்தில் குளித்தலை, பனிக்கம்பட்டி, வலையப்பட்டி, நச்சலூர், கீழநெய்தலூர், திருச்சி மாவட்டம் புலியூர், தாயனூர், பிராட்டியூர் வழியாக தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி சென்று திருமலைசமுத்திரத்தில் நிறைவடைகிறது. வாய்க்காலின் நீளம் மொத்தம் 133.80 கி.மீ. ஆகும்.
இந்த வாய்க்கால் மூலம் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் நேரடி பாசனமாக 11 ஆயிரத்து 198 ஏக்கரும், 107 குளங்கள் வாயிலாக 9 ஆயிரத்து 464 ஏக்கரும் என 20 ஆயிரத்து 662 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
புதிய கட்டளை மேட்டுவாய்க்காலில் தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நேற்று காலை மாயனூர் தடுப்பணையில் நடந்தது. கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் மதகுகளை திறந்து விட்டனர். இதனை தொடர்ந்து வாய்க்காலில் தண்ணீர் பாய்ந்தோடியது. தண்ணீர் திறக்கப்பட்டதும் வாய்க்காலில் கலெக்டர்கள் மலர் தூவினர். வினாடிக்கு 400 கன அடி வீதம் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.