வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை; ரூ.4½ லட்சம் பறிமுதல்
நெல்லை, தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கணக்கில் வராத ரூ.4½ லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
நெல்லை,
நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனைத்து பணிகளும் புரோக்கர்கள் மூலம் நடப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன் தலைமையில் போலீசார் நேற்று மதியம் 2.30 மணி அளவில் பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்றனர்.
கீழ் தளத்தில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது அங்கு இருந்த ஊழியர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. மேஜைகளில் இருந்த பணத்தை போலீசார் எண்ணினர். அந்த பணம் கணக்கில் காட்டப்பட்டுள்ளதா? என சரி பார்த்தனர். அதேபோல் மேல் தளத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். 5 குழுக்களாக பிரிந்து போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ரூ.3 லட்சத்து 58 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த அலுவலகத்தில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்களையும் போலீசார் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நின்று கொண்டு இருந்த 10 புரோக்கர்களையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களின் விலாசத்தை பதிவு செய்து கொண்டனர். இந்த சோதனையின்போது வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் ஆய்வாளர்கள் யாரும் அலுவலகத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜூ மற்றும் போலீசார் நேற்று மதியம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்றனர்.
அங்கு ஒவ்வொரு அறையாக தீவிர சோதனை நடத்தினர். அங்கு வசூல் செய்யப்பட்ட பணத்தையும் கணக்கெடுத்தனர். அப்போது கணக்கில் வராத பணம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 666 இருந்தது தெரிய வந்தது. அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அலுவலர்களிடமும், அங்கிருந்த சில புரோக்கர்களிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.