விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2017-10-11 22:30 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று திருவள்ளூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் யோகா, மாநில நிர்வாகிகள் தளபதிசுந்தர், கவுதமன்பாபு, கதிர்நிலவன், செந்தில், செல்வம், தமிழ்முதல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

சிறப்பு அழைப்பாளர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசியல் குழு மாநில செயலாளர் நீலவானத்து நிலவன், திருவள்ளூர் முன்னாள் நகர்மன்ற தலைவரும், மாநில நிர்வாகியுமான ராசகுமார் ஆகியோர் கலந்துகொண்டு டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், டெங்குவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், டெங்குவை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் பொதுமக்களுக்கு டெங்குவை கட்டுப்படுத்தும் விதமாக நிலவேம்பு குடிநீரை வழங்கினார்கள்.

மேலும் செய்திகள்