பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. ஆய்வு

நெல்லை,
தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ் நேற்று பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட அவர், ஆயுதப்படையில் உள்ள ஆயுதங்கள், தளவாடப்பொருட்கள், போலீஸ் வாகனங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது நீண்ட காலமாக கண்டுபிடிக்காமல் இருக்கும் திருட்டு, கொள்ளை வழக்குகள் குறித்தும், தொடர் கொலை நடைபெறுவதை எப்படி தடுப்பது என்பது குறித்தும் போலீஸ் அதிகாரிகளுடன் இவர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. (பொறுப்பு) கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டுகளும் கலந்து கொண்டனர்.