நெல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநகர் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ் தலைமை தாங்கினார்.;

Update: 2017-10-11 22:45 GMT

நெல்லை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநகர் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர், மாவட்ட அமைப்பாளர்கள் டேனியல் அருன்சிங், சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழினியன் கலந்து கொண்டு, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் மெத்தனம் காட்டி வரும் தமிழக அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் தொகுதி துணை செயலாளர் ஜெயகுமார், பாளையங்கோட்டை தொகுதி செயலாளர் வேலாயுதம், மண்டல செயலாளர் ஐகோர்ட்டு பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்