சென்னசமுத்திரம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்
செங்கம் அருகே உள்ள சென்னசமுத்திரம் கிராமத்தில் மனுநீதிநாள் முகாம் நடந்தது.
செங்கம்,
செங்கம் அருகே உள்ள சென்னசமுத்திரம் கிராமத்தில் மனுநீதிநாள் முகாம் நடந்தது. முகாமிற்கு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரேணுகா தலைமை தாங்கினார். செங்கம் துணை தாசில்தார் செல்வராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சங்கமித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் ராஜஸ்ரீ பொதுமக்களிடம் இருந்து 156 மனுக்களை பெற்றார். அவை பரிசீலிக்கப்பட்டதில் தகுதி வாய்ந்த 132 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் நாவலரசன் நன்றி கூறினார்.