ராணிப்பேட்டையில் புதிய உதவி கலெக்டர் பொறுப்பு ஏற்பு
ராணிப்பேட்டை கோட்ட உதவி கலெக்டராக கடந்த ஜூலை மாதம் வரை ராஜலட்சுமி பணியாற்றி வந்தார்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
ராணிப்பேட்டை கோட்ட உதவி கலெக்டராக கடந்த ஜூலை மாதம் வரை ராஜலட்சுமி பணியாற்றி வந்தார். அவர் மருத்துவ விடுப்பில் சென்றதையடுத்து, வேலூர் முத்திரை கட்டண தனி துணை ஆட்சியராக பணியாற்றி வந்த அப்துல்முனீர் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார்.
இந்த நிலையில் வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றி வந்த பி.கே.வேணுசேகரை ராணிப்பேட்டை உதவி கலெக்டராக தமிழ்நாடு அரசு நியமித்து உத்தரவிட்டது. இதையடுத்து ராணிப்பேட்டையில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை பி.கே.வேணுசேகர் பொறுப்பேற்றுக் கொண்டார். தாசில்தார்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்பட பலர் நேரில் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.