“இலங்கையில் நிச்சயம் தமிழ் ஈழ தேசிய கொடி பறக்கும்” நெல்லையில் நடந்த விழாவில் வைகோ பேச்சு
“இலங்கையில் நிச்சயம் தமிழ் ஈழ தேசிய கொடி பறக்கும்“ என்று நெல்லையில் நடந்த பாராட்டு விழாவில் வைகோ பேசினார்.
நெல்லை,
நெல்லை வக்கீல் சங்கம் சார்பில், ஜெனிவா மனித உரிமை கவுன்சிலில் தமிழர்களுக்காக உரிமை குரல் கொடுத்த வைகோவுக்கு பாராட்டு விழா மற்றும் வக்கீல் சுப்புரத்தினம் உருவப்படம் திறப்பு விழா ஆகியன நெல்லை வக்கீல் சங்க கூட்ட அரங்கில் நேற்று மாலை நடந்தது.
வைகோ
விழாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு வக்கீல் சுப்புரத்தினம் உருவப்படத்தை திறந்து வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-
நெல்லை வக்கீல் சங்கத்தில் 1969-ம் ஆண்டு உறுப்பினராக சேர்ந்து ரத்தினவேல் பாண்டியன், முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் ஆகியோரிடம் இளம் வக்கீலாக சேர்ந்து பயிற்சி பெற்றேன். அந்த பயிற்சிதான் இன்று, நான் தமிழ்நாட்டிற்கு எதிராக எந்த திட்டங்கள் வந்தாலும் அதை எதிர்த்து போராடி, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நானே வாதாடுவதற்கு அடித்தளமாக உள்ளது. திராவிட இயக்கத்தில் எனக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தவர் ரத்தினவேல் பாண்டியன். என்னை மாதிரி யாரும் இருந்தது கிடையாது. ஒரே நாளில் ஒரு வழக்கில் கோர்ட்டில் வக்கீலாக ஆஜராவேன். மற்றொரு வழக்கில் குற்றவாளியாகவும் ஆஜரானேன்.
வன்மையாக கண்டிக்கிறேன்
ஜெனிவாவில் முன்பு நடந்த ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நான் பேசும்போது, இலங்கை மண்ணில் 400-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கைவிலங்குடன் கொலை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அதனை தோண்டி பார்க்க வேண்டும் என்று பேசினேன். அதை ஏற்று தோண்டி பார்த்தபோது 400 எலும்பு கூடுகள் இருந்தன.
தற்போது நடந்த ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நான் பேசுகையில், உலகத்தின் பூர்விக குடிமக்கள் தமிழர்கள். எங்களுக்கு என்று தனிநாடு இல்லை. எங்கள் இனத்தை படுகொலை செய்தவரை இந்த மன்றம்(ஐ.நா.மன்றம்) பாராட்டி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறினேன்.
இலங்கையில் நிச்சயம் தமிழ் ஈழ தேசிய கொடி
இலங்கையில் சிங்களம், ஈழம் என தனித்தனி நாடாக இருந்தது. இங்கிலாந்து அரசு சுதந்திரம் கொடுக்கும்போது ஒன்றாக இணைத்து சிங்களர்களிடம் சுதந்திரத்தை கொடுத்து விட்டு சென்று விட்டனர். எனவே இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு என்று தனிநாடு வழங்க வேண்டும்.
இதற்காக உலகில் உள்ள அனைத்து தமிழர்களையும் அழைத்து இலங்கையில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் நான் கூறினேன். இலங்கையில் நிச்சயம் தனி ஈழம் அமையும். அங்கே நிச்சயம் தமிழ் ஈழ தேசிய கொடி பறக்கும்.
இவ்வாறு வைகோ பேசினார்.