நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு ஊக்க தொகை வழங்க வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-10-11 00:43 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவனருள் செல்வம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ஜீவா, செயலாளர் சீனி.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட துணை செயலாளர் சிவக்குமார், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர் டாஸ்மாக் ஊழியர்களுக்கு கடந்த மாதம் 1-ந்தேதி முதல் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ள ஊக்க தொகையை தொடர்ந்து வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 40 சதவீதம் வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு சாதகமான நீதிமன்ற தீர்ப்புகளை மேல்முறையீடு செய்யாமல் அமல்படுத்த வேண்டும்.

வாரிசு வேலை

நீண்ட காலமாக பணி மறுக்கப்பட்ட ஊழியர்களுக்கு உடனடியாக பணி வழங்கவேண்டும். முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். ஊழியர்களை மிரட்டும் தணிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இரவு காவலர்கள் நியமனம் செய்ய வேண்டும். பணியில் இருந்த போது இறந்த ஊழியர்களின் வாரிசுக்கு வேலை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்