மாநில வளர்ச்சிக்கு யார் தடையாக இருந்தாலும் விடமாட்டோம், அமைச்சர் நமச்சிவாயம் உறுதி
புதுவை மாநில வளர்ச்சிக்கு யார் தடையாக இருந்தாலும் விடமாட்டோம் என்று அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை மாநில காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் பொறுப்பாளராக பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சர் ஜக்மோகன் சிங், துணை பொறுப்பாளராக கேரள மாநிலத்தை சேர்ந்த பென்னி ஆகியோர் பணியாற்றினர். இதில் புதிய பூத் கமிட்டி, தொகுதி கமிட்டி, மாவட்ட கமிட்டி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன், முன்னாள் அமைச்சர் வல்சராஜ் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் வழிகாட்டுதலோடு புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி தேர்தல் நடந்தது. இதில் பூத், தொகுதி, மாவட்ட கமிட்டி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதே போல் காரைக்கால், மாகி, ஏனாம் பகுதி நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்வியும், அவர் அளித்த பதிலும் வருமாறு:-
கேள்வி: கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக அமைச்சர் கந்தசாமி டெல்லியில் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளார். இதில் அமைச்சர்களின் நிலை என்ன?
பதில்: இது தொடர்பாக முதல்-அமைச்சரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். புதுவை அரசுக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் கவர்னர் கிரண்பெடி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். புதுவை மாநில வளர்ச்சிக்கு யார் தடையாக இருந்தாலும் விடமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.