நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனுக்களை மாலையாக அணிந்து வந்தவரால் பரபரப்பு

குமாரபாளையம் அருகே வெப்படையை சேர்ந்தவர் பாலு என்கிற பாலகிருஷ்ணன் (வயது 45).

Update: 2017-10-10 07:30 GMT
நாமக்கல்,

இவர் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு இதுவரை கொடுத்த மனுக்களை மாலையாக அணிந்து மனு கொடுக்க வந்தார். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மாலையை பறித்துகொண்டு அவரை கலெக்டரிடம் மனு கொடுக்க அனுப்பினர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எலந்தைகுட்டை ஊராட்சி வெப்படையில் சுகாதார சீர்கேடு சம்மந்தமாக பலமுறை மனு அளித்துள்ளேன். வெப்படை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு அடிப்படை வசதி செய்யப்படவில்லை. மேலும் வெப்படையில் போலீஸ் நிலையம், தீயணைப்பு நிலையம் அமைய அரசாணை வெளியிட்டு பல மாதங்களாகியும் நிறைவேற்றப்படவில்லை.

மக்கள்தொகை அதிகம் உள்ள எலந்தகுட்டை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்தவேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளேன். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்ட மனுக்களை மாலையாக அணிந்து கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்