“நான் யாருக்கும் ஸ்லீப்பர் செல் இல்லை” திருச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
சசிகலா பற்றி கூறியது தனது தனிப்பட்ட கருத்து என்றும், “நான் யாருக்கும் ஸ்லீப்பர் செல் இல்லை” என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
திருச்சி,
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று முன்தினம் மதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ‘ஜெயலலிதா அரசு அமைய சசிகலா தான் காரணம். நான் விருப்பு, வெறுப்புகளை அடக்கிக்கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பணியாற்றுகிறேன்’ என்று கூறி இருந்தார்.
எடப்பாடி பழனிசாமி அணியில் தனது ஆதரவாளர்கள் ஸ்லீப்பர் செல் போல் இருக்கிறார்கள் என டி.டி.வி.தினகரன் ஏற்கனவே கூறி இருப்பதால், அமைச்சர் செல்லூர் ராஜூவின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி டி.டி.வி.தினகரன் அணியை சேர்ந்த நடிகை சி.ஆர்.சரஸ்வதி ஸ்லீப்பர் செல்கள் இப்போது வெளிவர தொடங்கி விட்டார்கள் என கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் திருச்சியில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் டி.டி.வி.தினகரன் குறிப்பிட்ட ‘ஸ்லீப்பர் செல்’ நீங்கள் தான் (அமைச்சர் செல்லூர் ராஜூ) என்ற கருத்து நிலவுகிறதே என்று கேள்வி கேட்டனர்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-
நான் யாருக்கும் ஸ்லீப்பர் செல் இல்லை. மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் நான் பங்கேற்றபோது பத்திரிகையாளர்கள் ஜெயலலிதா அரசு அமைய சசிகலா தான் காரணமா? என கேட்டார்கள். அதற்கு நான், அது உண்மை தான் என மனசாட்சிப்படி பதில் அளித்தேன். இந்த கருத்தில் இருந்து இப்போதும் மாறுபடவில்லை. இது எனது தனிப்பட்ட கருத்து. தமிழகத்தில் டெங்குவை விட மோசமானது தி.மு.க. தான். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ரவுடியிசம் அதிகரித்து விடும் என்றும் கூறி இருந்தேன். ஆனால் நான் கூறியதை ஊடகங்கள் பெரிதுபடுத்தி வேறு மாதிரி வெளியிட்டு விட்டார்கள். தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சிறப்பாக ஆட்சியையும், கட்சியையும் வழிநடத்தி வருகிறார்கள்.
ஜெயலலிதாவின் கனவு, லட்சியத்தை அடைய நாங்கள் பாடுபட்டு வருகிறோம். (இப்படி கூறியபோது அவரது கண்கள் கலங்கி நா தழுதழுத்தது). ஜெயலலிதா கூறியபடி கட்சியும், ஆட்சியும் இன்னும் நூறு ஆண்டு காலத்திற்கு தொடர பாடுபடுவேன். 2021 சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.