கோவில் அருகே குவாரி செயல்பட எதிர்ப்பு, கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

மூவரைவென்றான் மலைகொழுந்தீஸ்வரர் கோவில் அருகே குவாரிகள் செயல்பட அனுமதி வழங்க கூடாது என்பதை வலியுறுத்தி கட்டையதேவன்பட்டி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2017-10-09 22:30 GMT
விருதுநகர்,

குடவரைக்கோவில் மூவரைவென்றானில் உள்ள மலைகொழுந்தீஸ்வரர் கோவில் சிறப்பு பெற்ற குடவரைக்கோவில் ஆகும். கடந்த 2013–ம் ஆண்டு இக்கோவில் அருகில் உள்ள குவாரிகளில் வெடிகள் பயன்படுத்தப்பட்டதால் கோவிலின் கல்மண்டபம் சேதம் அடைந்தது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்கள் போராட்டம் நடத்தியதால் குவாரிகள் செயல்பட தடைவிதிக்கப்பட்டது.

தற்போது இக்கோவிலை சுற்றி உள்ள குவாரிகள் மீண்டும் செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்குவாரிகள் செயல்பட அனுமதி வழங்கினால் மலைகொழுந்தீஸ்வரர் கோவில் கல் மண்டபம் முற்றிலுமாக சேதம் அடைந்து விடுவதோடு, கோவிலுக்கு வருவோருக்கும் பாதிப்பு ஏற்படும். இது பற்றி ஏற்கனவே உரிய அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை ஏதும் எடுத்ததாக தெரியவில்லை.

எனவே மூவரைவென்றான் குடவரைகோவில் அருகே குவாரிகள் செயல்பட அனுமதி வழங்க கூடாது என வேண்டுகிறோம். மேலும் மலைகொழுந்தீஸ்வரர் கோவிலை ஆன்மிக சுற்றுலாதலமாக அறிவிக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்