தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை

தமிழக வேளாண் பல்கலைக் கழகத்தில் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 129 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2017-10-09 11:00 GMT
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் கோவையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் இளநிலை உதவி யாளர்- தட்டச்சர் பணி யிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பல்வேறு கல்விப் பிரிவுகளில் இந்த பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 129 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிரிவு வாரியான பணியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. 31-8-2017-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும்.

கல்வித்தகுதி:

பட்டப்படிப்புடன், 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் தமிழ்- ஆங்கிலம் தட்டச்சு தேர்வில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு, திறமைத் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், தனிநபர் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.750 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மற்றவர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. கட்டணம் டி.டி.யாக இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை நகல் எடுத்து கோவை வேளாண் பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகள் இணைக்கப்பட வேண்டும். நகல் விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் 31-10-2017-ந் தேதியாகும்.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.jat.tnausms.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

பேராசிரியர் பணி

இதே பல்கலைக்கழகத்தில் மற்றொரு அறிவிப்பின்படி கற்பித்தல் சார்ந்த பணிக்கு 43 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பேராசிரியர் - 5 இடங்கள், இணை பேராசிரியர் - 10 இடங்கள், உதவி பேராசிரியர் -28 பணியிடங்கள் உள்ளன.

வேளாண்மை சார்ந்த முதுநிலை படிப்புகளுடன், ஆராய்ச்சி படிப்பு படித்தவர்கள், ‘நெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிகள் உள்ளன.
இந்த பணிகளுக்கு ரூ.1000-ம் கட்டணம் செலுத்தி, குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பம், 20-10-2017-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடைய வேண்டும்.

மேலும் செய்திகள்