கடல்சார் தொழில்நுட்ப மையத்தில் வேலை
இந்திய கடல்சார் தொழில்நுட்ப மையத்தில் 203 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
மத்திய புவி அறிவியல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனம், தேசிய கடல்சார் தொழில்நுட்பவியல் மையம். நியாட் (NIOT) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த நிறுவனம் சென்னை பள்ளிக்கரணையில் செயல்பட்டு வரு கிறது. கடல்சார் ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகளை கவனிக்கும் இந்த நிறுவனத்தில் தற்போது திட்ட ஆராய்ச்சியாளர், திட்ட ஆராய்ச்சி உதவியாளர், திட்ட தொழில்நுட்பனர், திட்ட நிர்வாகி உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 203 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஏராளமான அறிவியல், தொழில்நுட்ப பிரிவில் பணிகள் உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
வயது வரம்பு:
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறு படுகிறது. அதிகபட்சம் 40 வயதுடையவர் களுக்கு பணிகள் உள்ளன. 30-10-2017-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
கல்வித்தகுதி:
மெக்கானிக்கல், புரொடக்சன், ஏரோ நாட்டிகல், ஆட்டோ மொபைல், நேவல் ஆர்கிடெக்சர், ஓசோன் டெக்னாலஜி, இண்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஓசனோகிராபி, பிசிக்கல் ஓசோகிராபி, ஓசோன் டெக்னாலஜி, ஓசியானிக் சயின்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் பொறியியல், தொழில்நுட்ப பட்டப்படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அந்தந்தப் பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 30-10-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து, சென்னையில் உள்ள ‘நியாட்’ இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். நகல் விண்ணப்பம் 6-11-2017-ந் தேதிக்குள் சென்றடையும் படி அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.niot.res.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.