இஸ்ரோவில் வேலைவாய்ப்பு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தற்போது பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இஸ்ரோ அமைப்பின் கீழ் இயங்கும், விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திருவனந்தபுரத்தில் செயல்படுகிறது. இங்கு டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு 28 பேர் மற்றும் ஜூனியர் இந்தி மொழிபெயர்ப்பாளர் பணிக்கு ஒருவர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது.
எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனி கேசன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன் , மெக்கானிக்கல், சிவில் போன்ற டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்பை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மொழி பெயர்ப்பாளர் பணிக்கு முதுநிலை ஆங்கிலம் அல்லது இந்தி படித்திருக்க வேண்டும். மொழி பெயர்ப்பு டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மற்றொரு அறிவிப்பின்படி இதே ஆய்வு மையத்தில் ரேடியோகிராபர், டெக்னீசியன் போன்ற பணிகளுக்கு 25 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. கடந்த ஜூலை மாதம் இந்த பணிகளுக்கான அறிவிப்பு வெளியானது. தற்போது சில மாற்றங்கள் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அப்போது விண்ணப்பிக்காதவர்கள் மட்டும் இப்போது விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை. இந்த பணிகளுக்கு 23-10-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.
இதேபோல ஆராய்ச்சியாளர்/என்ஜினீயர் பணிக்கு 28 பேரை தேர்வு செய்யவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதுநிலை என்ஜினீயரிங், தொழில்நுட்ப படிப்பு, அறிவியல் படிப்பு படித்தவர் களுக்கு இதில் பணி வாய்ப்பு உள்ளது. ஒரு சில பணியிடங்களில் பட்டதாரி என்ஜினீயர்களுக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த பணிகளுக்கும் 23-10-2017-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
இது பற்றிய விரிவான விவரங்களை www.vssc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
மகேந்திரகிரி
மற்றொரு அறிவிப்பின்படி மகேந்திரகிரியில் செயல்படும், இஸ்ரோ கிளை மையத்திற்கு டெக்னிக்கல் அசிஸ்டன்ட், டிராப்ட்ஸ்மேன், தீயணைப்பு வீரர், டிரைவர், கேட்டரிங் அட்டன்ட் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 35 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. டிப்ளமோ என்ஜினீயர்கள் மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. இந்த பணிகளுக்கு 25-10-2017-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விரிவான விவரங்களை www.iprc.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.