திருவள்ளூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர் சாவு சிவகங்கையில் ஒரே நாளில் 4 பேர் பலி
திருவள்ளூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர் பரிதாபமாக இறந்தார். சிவகங்கையில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் 4 பேர் பலியானார்கள்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் குப்பத்தை சேர்ந்தவர் முருகையன். இவரது மகன் நரேஷ்குமார் என்ற ராஜா (வயது19). இவர் பிளஸ்-2 வரை படித்துள்ளார். கடந்த 5-ந் தேதி நரேஷ்குமாருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு நடந்த பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது.
அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நரேஷ்குமார் நேற்று சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்துபோனார். அப்போது டாக்டர்கள் நரேஷ்குமாரின் பெற்றோரிடம் அவர் மாரடைப்பால் இறந்ததாக கூறியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அரண்வாயல்குப்பத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். நரேஷ்குமார் டெங்கு காய்ச்சலால்தான் இறந்துபோனார் என கூறியும் தவறான தகவல் அளித்த சென்னை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களை கண்டித்தும் திடீரென திருவள்ளூர்-சென்னை நெடுஞ்சாலையான அரண்வாயல்குப்பத்தில் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் சாலையின் இருபுறமும் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் அறிந்த செவ்வாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
* விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள செம்பராம்பட்டு காலனியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி சின்னப்பொண்ணு (27) மர்ம காய்ச்சல் காரணமாக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
* சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கிராமத்தை சேர்ந்த நாகூர்கனி என்பவரது 10 மாத குழந்தை ஹாஜிராபீவி, அதே பகுதியை சேர்ந்த பழனிக்குமார் மகன் பாலமுருகன் (10), ஆண்டூருணி கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் வியாகுலமேரி மகளான கல்லூரி மாணவி கிளாடின் சோபியா (19), திருப்பத்தூர் மாங்கொம்பு கிராமத்தை சேர்ந்த நாகலிங்கம் (42) ஆகிய 4 பேர் டெங்கு காய்ச்சலுக்கு நேற்று ஒரே நாளில் பலியானார்கள்.
* தர்மபுரி மாவட்டம் கடத்திக்கொள்மேடு கிராமத்தை சேர்ந்த சரவணனின் 11 மாத பெண் குழந்தையான சுஷ்மிதா டெங்கு காய்ச்சல் காரணமாக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
* திருவண்ணாமலை மாவட்டம் சின்னக்கல்லபாடி பகுதியை சேர்ந்த கிருபாகரன் மகள் லீனா (5) மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிறுமி இறந்தாள்.
கல்லூரி மாணவி சாவு
* ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த கருக்கம்பாளையம் காலனியை சேர்ந்த வீரகுமார் மகள் சந்தியா (22). கல்லூரி மாணவியான அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவரை ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்தபோது டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. அதற்கு சிகிச்சை பெற்று வந்த சந்தியா நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.