சுங்குவார்சத்திரம் அருகே ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் கொள்ளை 5 பேர் கைது

சுங்குவார்சத்திரம் அருகே ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-10-09 03:52 GMT
வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை அடுத்த பொடவூர் கிராமத்தை சேர்ந்தவர் உஷாபிரியன். மத்திய அரசு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது பண்ணை வீட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 6 பேர் கொண்ட கும்பல் கொள்ளை அடித்தது. சத்தம் கேட்ட காவலாளி சரவணன், அவரது மனைவி யமுனா, ஊர் பொதுமக்கள் கொள்ளையர்களை பிடிக்க முயற்சி செய்யும் போது கொள்ளையர்கள் 5 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
கொள்ளையர்களில் ஒருவரான திருநின்றவூரை சேர்ந்த ரஞ்சித் என்ற டேவிட் அடித்துக்கொல்லப்பட்டார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்விக்டர் மற்றும் போலீசார் கொள்ளையில் ஈடுபட்டு தப்பி ஓடிய பொடவூரை சேர்ந்த சதீஷ் (வயது 25), பெருமாள்(21), கண்ணன்(20), பரணி(23) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து மடிக்கணினி, ஐபேட், கைக்கெடிகாரம், வெள்ளிக்கொலுசு, ரூ.2 ஆயிரம் போன்றவற்றை போலீசார் கைப் பற்றினர்.

மேலும் செய்திகள்