சிறை ஊழியர்களின் சீருடையில் மாற்றம் மராட்டிய அரசு அறிவிப்பு
மராட்டியத்தில் 226 சிறைகள் உள்ளன. இதில், அலுவலக உதவியாளர்கள் முதல் டி.ஐ.ஜி. வரை 4 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
மும்பை,
மராட்டியத்தில் 226 சிறைகள் உள்ளன. இதில், அலுவலக உதவியாளர்கள் முதல் டி.ஐ.ஜி. வரை 4 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், போலீசாரை போல் சிறை துறையில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் அனைவரது சீருடையையும் நீல நிறத்தில் இருந்து காக்கி நிறத்தில் மாற்ற மாநில அரசின் உள்துறை முடிவு செய்திருக்கிறது. மத்திய அரசின் சிறை மாதிரி விதிகள் படி, சீருடை மாற்றத்தை நடைமுறைப்படுத்துவதாக உள்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.