போலி ஆவணம் மூலம் ரெயிலில் இருக்கை பெற முயன்ற ஏஜெண்டு கைது

கொங்கன் ரெயில்வே அலுவலகத்திற்கு சமீபத்தில் இ–மெயில் ஒன்று வந்தது. அதில் முதல்–மந்திரியின் லெட்டர் பேடில் ஒரு பயணிக்கு இருக்கை ஒதுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது

Update: 2017-10-08 22:30 GMT

மும்பை,

கொங்கன் ரெயில்வே அலுவலகத்திற்கு சமீபத்தில் இ–மெயில் ஒன்று வந்தது. அதில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசின் லெட்டர் பேடில் ஒரு பயணிக்கு இருக்கை ஒதுக்குமாறு (அவசரகால ஒதுக்கீடு) கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. சந்தேகமடைந்த ரெயில்வே அதிகாரி இதுகுறித்து முதல்– மந்திரி அலுவலகத்தை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது அது போலி லெட்டர் பேடு என்பதும், முதல்– மந்திரி தனது ஒதுக்கீட்டில் இருக்கை ஒதுக்க யாருக்கும் சிபாரிசு செய்யவில்லை என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் கன்காவ்லி பகுதியில் ரெயில்வே டிக்கெட் ஏஜண்டாக செயல்பட்டு வரும் யோகேஷ் (வயது30) என்பவர் முதல்– மந்திரி ஒதுக்கீட்டில் போலி ஆவணங்கள் மூலம் ரெயில் இருக்கை வசதி பெற முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரது டிராவல் ஏஜென்சி அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

மேலும் செய்திகள்