போக்குவரத்து பணிமனை மேலாளரை கண்டித்து பஸ்களை இயக்காமல் டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டம்
காட்டுமன்னார்கோவிலில் போக்குவரத்து பணிமனை மேலாளரை கண்டித்து அரசு பஸ்களை இயக்காமல் டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவிலில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை உள்ளது. இந்த பணிமனையில் இருந்து விருத்தாசலம், கடலூர், சிதம்பரம், சென்னை, மணல்மேடு, சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு 27 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிமனையில் கிளை மேலாளராக அசோக்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் விடுமுறை எடுத்ததாக கூறி, அதே பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வரும் செல்வம்(வயது 45) என்பவருக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த கண்டக்டர் செல்வம், நேற்று முன்தினம் இரவு கிளைமேலாளர் அசோக்குமாரிடம் சென்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அசோக்குமார், தனது ஆதரவாளர்கள் 2 பேருடன் சேர்ந்து செல்வத்தை திட்டி, தாக்கியதாக தெரிகிறது. மேலும் செல்வமும், ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் தனித்தனியாக காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை 4.30 மணியளவில் காட்டுமன்னார்கோவில் போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து பஸ்களை இயக்குவதற்காக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் வந்தனர். அப்போது கண்டக்டர் செல்வம் தாக்கப்பட்டதை அறிந்த அவர்கள், பஸ்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கண்டக்டரை தாக்கிய கிளை மேலாளர் அசோக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை பஸ்களை இயக்கமாட்டோம் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் அரசு போக்குவரத்துக்கழக உதவி பொறியாளர் மதிவண்ணன், வணிக மேலாளர் செந்தில் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே உடனடியாக பஸ்களை இயக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர்.
இதையேற்று காலை 7.30 மணி முதல் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் போராட்டத்தை கைவிட்டு பஸ்களை இயக்கினர். 3 மணிநேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தால் கிராமங்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர். இதேபோல் கடந்த 2-ந்தேதியும் கிளைமேலாளர் அசோக்குமாரை கண்டித்து கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.