நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கு: மேலும் 3 பேர் கைது
களியக்காவிளை அருகே நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
நாகர்கோவில்,
குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மத்தம்பாலையில் நிர்மல் கிருஷ்ணா என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் குமரி மாவட்டம் மற்றும் கேரளா மாநிலத்தை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைப்புத்தொகை பணம் செலுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஓணம் பண்டிகையின் போது, நிதி நிறுவனத்தை திடீரென பூட்டிவிட்டு அதன் உரிமையாளர் தலைமறைவாகி விட்டார். இதனால் பணத்தை இழந்து விட்டதாக நினைத்து வாடிக்கையாளர்கள் தொடர் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, நிதி நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் நாகர்கோவிலில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் நிதி நிறுவன இயக்குனர்கள் 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர், நிதி நிறுவன இயக்குனர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களை கைது செய்யும் பணியையும் முடுக்கி விட்டனர்.
இந்தநிலையில், நிதி நிறுவன இயக்குனர்களான பளுகல் அருகே நாகக்கோடு வீடை சேர்ந்த ரவீந்திரன் (வயது 47), மத்தம்பாலையை சேர்ந்த அஜித்குமார் (57), சேகர் நாயர் (59) ஆகிய 3 பேர் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பால்துரை தலைமையில், மண்டைக்காடு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன், குளச்சல் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலஸ் ஆகியோர் விரைந்து சென்று 3 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நிதி நிறுவன வழக்கு சம்பந்தமாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் முன்ஜாமீன் பெறுவதற்காக 3 பேரும் வடசேரியில் இருந்து மதுரைக்கு பஸ் ஏறி செல்வதற்கு வந்ததாக தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் போலீஸ் நடத்திய சோதனையில், தங்க நகைகள், பணம் மற்றும் டெம்போ வேன், டிப்பர் லாரிகள், கார் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.