தீவட்டிப்பட்டியில் முதல்-அமைச்சருக்கு வரவேற்பு

தீவட்டிப்பட்டியில் முதல்-அமைச்சருக்கு வரவேற்பு

Update: 2017-10-08 22:30 GMT
ஓமலூர்,

தர்மபுரியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து காரில் சென்றார். அப்போது தீவட்டிப்பட்டியில் காடையாம்பட்டி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஓமலூர் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேல் தலைமையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். இந்த நிகழ்ச்சியில் சேலம் தொகுதி எம்.பி. பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி கிருஷ்ணன், சிவபெருமான், ஒன்றிய செயலாளர் சித்தேஸ்வரன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்