பயணங்கள் முடிவதில்லை..
வகுப்பறைகள் கற்றுத்தராததை இயற்கை கற்றுத்தரும். பள்ளிகள் கற்றுத்தராததை பயணங்கள் கற்றுத்தரும் என்பது மூகாம்பிகா ரத்தினத்தின் தத்துவம்.
வகுப்பறைகள் கற்றுத்தராததை இயற்கை கற்றுத்தரும். பள்ளிகள் கற்றுத்தராததை பயணங்கள் கற்றுத்தரும் என்பது மூகாம்பிகா ரத்தினத்தின் தத்துவம். பொள்ளாச்சியை சேர்ந்த இவர், 70 நாட்களில் 24 நாடுகளை காரில் சுற்றிவந்திருக்கிறார். இந்தியாவில் தொடங்கிய இவரது பயணம் இங்கிலாந்தில் நிறைவடைந்திருக்கிறது. இவருடன் கோவையை சேர்ந்த மீனாட்சி அரவிந்தும் கார் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். பாதி வழியில் மும்பையை சேர்ந்த பிரியா ராஜ்பாலும் இவர்களோடு பயணத்தில் பங்கு கொண்டிருக்கிறார்.
உலக கல்வி விழிப்புணர்வு தினத்தை மையமாகக் கொண்டு ரோட்டரி அமைப்புக்காக இந்த பயணத்தை மேற்கொண்ட மூவரும், இந்திய பெண்கள் எவ்வளவு பெரிய சவாலையும் எதிர்கொள்வார்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
இவ்வளவு நீண்ட பயணம் பெண்களுக்கு எப்படி சாத்தியம்? இவர்கள் சந்தித்த நெருக்கடிகள் என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு மூகாம்பிகா பதில் அளிக்கிறார்:
“நான் பள்ளிப்பருவத்திலே கார் ஓட்ட கற்றுக்கொண்டேன். நன்றாக படிப்பேன். கல்லூரியில் கணினி அறிவியலில் என்ஜினீயரிங் முடித்தேன். அந்த காலகட்டத்திலே தனியாக காரை ஓட்டிக்கொண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் ரிஷிகேஷ் வரை பயணித்தேன். சாலை பயணம் எனக்கு அலாதியான மகிழ்ச்சியை தரும். தனியாக பயணம் செய்வதை நினைத்து நான் ஒருபோதும் பயந்ததில்லை.
கடந்த ஆண்டு முகநூலில் மீனாட்சி அரவிந்துடன் நட்பு ஏற்பட்டது. அவரும் என்னைப் போன்ற பயண விருப்பம் கொண்டவர். அவர் முகநூலில் ‘கோவையில் இருந்து காரில் புறப்பட்டு இங்கிலாந்து செல்ல இருக்கிறேன். வருகிறீர்களா?’ என்று கேட்டார்.
நான் சம்மதம் தெரிவித்தேன். அதன் பின்பு மும்பையை சேர்ந்த பிரியா ராஜ்பாலும் விருப்பம் தெரிவித்தார். அவர் மும்பையில் இருந்ததால் நானும், மீனாட்சியும் சேர்ந்து பயணத்திட்டம் வகுத்தோம். எனக்கு சர்வதேச ஓட்டுனர் உரிமம் வாங்க வேண்டி யிருந்தது. மீனாட்சி ஏற்கனவே 40-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வெவ்வேறு நண்பர்களுடன் சென்று வந்திருக்கிறார். எனக்கு இதுதான் முதல் அனுபவம். ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் நாட்களை கணக்கிட்டு விசா பெற விண்ணப்பித்தோம்.
24 நாடுகளை கடந்து செல்வது என்பது எளிதானது அல்ல. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு சட்டதிட்டம் உண்டு. அதை தெரிந்து அந்த நாட்டுக்கு ஏற்ப அனுமதிகளை பெற வேண்டும். அதோடு காரை ஓட்டிச் செல்வதற்கான சிறப்பு உரிமங்களையும் பெற வேண்டும். இதற்கெல்லாம் அதிக செலவாகும். எங்களுக்கு பிரபலமான சில நிறுவனங்கள் உதவி செய்தன..” என்கிறார், மூகாம்பிகா.
இவர்கள் கடந்த மார்ச் 26-ந் தேதி கோவையில் இருந்து பயணத்தை தொடங்கினார்கள். இந்திய எல்லை வரை இவர்கள் பயணம் சுமுகமாக சென்றிருக்கிறது.
“இந்திய எல்லையை கடந்து மியான்மர் சென்றோம். அந்த நாட்டு சட்டப்படி வெளிநாட்டு பயணிகள் தங்கள் செலவில் வழிகாட்டியையும், மொழி பெயர்ப்பாளரையும், பாதுகாப்புக்கு ஒரு ராணுவ வீரரையும் ஏற்பாடு செய்துகொள்ளவேண்டும். பணத்தை வழங்கி அதற்குரியவர்களை பெற்றுக்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம். நானும், மீனாட்சியும் காரை இயக்கினோம்.
நாங்கள் தாய்லாந்து எல்லைக்குள் நுழைந்தபோது பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். அதுவரை எங்களுடன் வந்த பாதுகாவலர், மொழி பெயர்ப்பாளர் யாரும் எங்களுடன் இல்லை. எனவே தாய்லாந்து அதிகாரிகள் பேசியது எதுவும் எங்களுக்கு புரியவில்லை. நாங்கள் எங்கள் ஓட்டுனர் உரிமம், கார் உரிமம், விசா உள்ளிட்ட ஆவணங்களை அவரிடம் காட்டினோம். ஆனால் அவர் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் 2 பேரும் அழுதுவிட்டோம். கடைசியில் அவர் ஒரு ஆவணத்தை எங்களுக்கு மாதிரியாக காட்டினார். அது தாய்லாந்தில் கார் ஓட்டுவதற்கான தற்காலிக உரிமம். பொதுவாக சீனாவில் இது தேவை. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள நாடுகளுக்கும் அது தேவை என்பது எங்களுக்கு தெரியும். தாய்லாந்திலும் அந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.
இறுதியில், ‘எங்கள் நாட்டிற்குள் வர உங்களுக்கு விசா, பாஸ்போர்ட் போன்றவை இருக்கிறது. அதனால் நீங்கள் மட்டும் செல்லுங்கள். உங்கள் காருக்கு அனுமதியில்லை. விடமுடியாது’ என்றார்கள்.
நல்ல வேளையாக நாங்கள் பயணம் குறித்து முகநூலில் ஏற்கனவே ஒரு பக்கம் தொடங்கி இருந்தோம். அதை தொடக்கத்தில் இருந்தே ஆயிரக்கணக்கானவர்கள் பின்தொடர்ந்து கொண்டிருந்தார்கள். எங்கள் பயண படங்கள், வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்ததால், எங்களுக்கு ஏற்பட்டிருந்த நெருக்கடிகள் குறித்தும் பதிவிட்டோம். நிறைய பேர் ஆலோசனை தந்தார்கள். அதில் ஒருவர் தாய்லாந்து முன்னாள் துணை பிரதமரை சந்திக்க தேவையான ஏற்பாடுகளை செய்து தருவதாக கூறினார்.
அந்த நண்பரின் ஆலோசனைபடி முன்னாள் துணை பிரதமரை சந்திக்க விமானத்தில் சென்றோம். அவர், பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் பேசி, உரிமம் பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்து, அந்த உரிமத்தை இ-மெயிலில் அனுப்பி வைத்ததுடன் எல்லையில் இருந்த அதிகாரிகளுடனும் பேசிவிட்டார். அவருக்கு நன்றி கூறிவிட்டு, மகிழ்ச்சியுடன் அடுத்த விமானத்தை பிடித்து எல்லைக்கு சென்றோம். அதற்குள் இ-மெயில் வந்து விட்டதால், அதிகாரிகள் எங்களை காரில் தாய்லாந்து நாட்டுக்குள் செல்ல அனுமதித்தார்கள்.
உடனே மின்னல் வேக பயணத்தை தொடங்கினோம். அங்கிருந்து லாவோஸ் சென்றோம். அடுத்த 2 மணி நேரத்தில் லாவோஸ் நாட்டையும் கடந்து கிர்கிஸ்தான் எல்லைக்கு அருகே ஒரு விடுதியில் தங்கினோம். அந்த விடுதியில் நாங்கள் மட்டும்தான் தங்கியிருந்தோம். அங்கு திருநங்கை போன்று காணப்பட்ட ஒருவர் எங்களுக்கு தேவையான உதவிகளை செய்துதந்தார்.
மறுநாள் கிர்கிஸ்தான் சென்றோம். அது சீனாவின் பிடியில் இருக்கும் சிறிய நாடு. அதிகாரிகள் எங்களை சோதனையிட்டார்கள். இருவரும் பெண் என்பதால் ஆச்சரியப்பட்டார்கள். அந்த நாடு கடல் மட்டத்தில் இருந்து 13 ஆயிரத்து 500 அடிக்கு மேல் இருக்கிறது. பனி கொட்டிக்கொண்டே இருந்ததால், உடனடியாக பயணத்தை தொடர முடியாத நிலை. அங்கு ஒரே ஒரு அறை இருந்தது. எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் 4 பேர் அங்கு தங்கியிருந்தார்கள். எங்களையும் கூடவே தங்கிக்கொள்ள அனுமதித்தார்கள். அனுமதி கிடைத்த மகிழ்ச்சியைவிட, பயம் அதிகமாக இருந்தது. அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது தெரியாது. அவர்கள் பேசும் மொழியும் புரியாது தவித்தோம். குளிரும் எலும்புவரை ஊடுருவியது. தூக்கம் வராமல் டி.வி.யில் சினிமா பார்த்து இரவுப்பொழுதை கழித்தோம்.
அடுத்த நாள் பனி உருகத்தொடங்கியதும் கார் பயணத்தை தொடங்கினோம். எங்கு பார்த்தாலும் பனிக் குவியல். உலகிலேயே மிக அழகான நாடு கிர்கிஸ்தான்தான்! அதன் அழகினை ரசித்துக்கொண்டே ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்தோம். இடை இடையே சிறு கிராமங்கள் வந்தன. அங்கு ஒட்டகப்பால், மோர் என்று அந்த நாட்டு உணவுகளை ருசித்துக்கொண்டே சென்றோம்.
பின்பு உஸ்பெகிஸ்தான் சென்றோம். ரஷ்யா, சீனா போன்ற பெரிய நாடுகளை கடந்து, ஐரோப்பிய நாடுகளுக்குள் புகுந்தோம். பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்றோம். திட்டமிட்டபடி ஜூன் 3-ந் தேதி இங்கிலாந்து சென்றோம். இந்திய தூதர் அலுவலகத்தில் பயணத்தை முடித்தோம். தூதரையும் சந்தித்தோம். இந்திய சுதந்திரத்தின் 70-வது ஆண்டினை முன்னிட்டு 70 நாட்களில் எங்கள் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தோம்” என்றார், மூகாம்பிகா.
இவர்களது பயணத்தில் கசகிஸ்தானில் பிரியாவும் இணைந் திருக்கிறார். இங்கிலாந்தில் இருந்து இவர்கள் விமானத்தில் இந்தியா திரும்ப, கார் கப்பலில் வந்தடைந்திருக்கிறது.
மூகாம்பிகாவின் கார் பயண ஆசைக்கு காரணமாக இருந்தவர் அவரது தந்தை ரத்தினம். அவர் வி.பி.சிங், ராமகிருஷ்ண ஹெக்டே, சிவாஜி போன்றவர்களோடு நட்பில் இருந்தவர். தந்தையின் மரணம் மூகாம்பிகாவை கடுமையாக பாதித்திருக்கிறது. அதனால் ஏற்பட்ட தனிமையை போக்க இவர், தனியாக நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறார். இவருக்கு திருமணமாகி, 8 வயதில் சர்வதாரா என்ற மகள் இருக்கிறாள். மூகாம்பிகாவுக்கு 39 வயது.
தொடரட்டும் இவர்களது வெற்றிப் பயணங்கள்!