இன்பமே இன்னும் வா - என்.சி.மோகன்தாஸ்
மந்திரி ரத்னாகரின் பினாமி பெயரில் இயங்கும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மீது வெடிக்கும் ரசாயன பொருட்களை ஏற்றி வந்த லாரி மோதி கட்டிடத்திற்கு கடும் பாதிப்பும், உயிர் சேதமும் ஏற்படுகிறது.
முன்கதை சுருக்கம்:
மந்திரி ரத்னாகரின் பினாமி பெயரில் இயங்கும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மீது வெடிக்கும் ரசாயன பொருட்களை ஏற்றி வந்த லாரி மோதி கட்டிடத்திற்கு கடும் பாதிப்பும், உயிர் சேதமும் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் மீடியாவில் பணிபுரியும் சுவீகாவும், மணீசும் அந்த வழியாக காரில் சென்றதால் அவர்களும் விபத்தில் சிக்குகிறார்கள். இதில் சுவீகா காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவளது பக்கத்து படுக்கையில் சிகிச்சை பெற்று வந்த ரம்யா கொலை செய்யப்படுகிறாள். மணீசும், சுவீகாவும் சேர்ந்துதான் அந்த பெண்ணை கொலை செய்ததாக போலீசார் சந்தேகப்படுகிறார்கள். இதையடுத்து இருவரும் கொலையாளியை பற்றிய விவரங்களை சேகரிக்க களம் இறங்குகிறார்கள். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் மர்மமான முறையில் இறந்துவிட, மெக்கானிக் மாணிக்கமும் விபத்தில் சிக்கி இறக்கிறார். இதற்கிடையே டி.எஸ்.பி சந்தோஷ் மணீசுக்கு போன் செய்து, ரம்யாவின் மரணம் குறித்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பை தன்னிடம் ஒப்படைத்திருப்பதாக கூறுகிறார். மணீசுடன் சேர்ந்து மெக்கானிக் மாணிக்கத்தின் கடைக்கு சென்று விசாரிக் கிறார். பின்னர் இருவரும் சுவீகாவிடம், ரம்யாவை பற்றி விசாரிக்க செல்கிறார்கள்.
சுவீகாவின் வீடு.
சோபாவில் பத்திரிகைகள் பரவிக் கிடந்தன. ஒப்புக்கு கலந்து வந்த காபி ஆடை படிந்து ஆறிப்போயிருக்க, அவள் அந்த போட்டோ ஆல்பத்தையே வெறித்திருந்தாள்.
தொலைக்காட்சியில் சம்பந்தமில்லாமல் சேனலை மாற்றிக்கொண்டே இருந்தவள், ஏதோ ஒன்றில் புன்னகை மன்னன் படத்தின் பாடல் ஒளிபரப்பாக - அப்படியே மெய் மறந்தாள்.
அங்கே கமல், ரேகாவுடன்! இயற்கையும் எழிலும் சூழ்ந்த கேரளத்தின் அதிரப்பள்ளி அருவி!
புன்னகை மன்னன் படத்திற்கு பிறகு அது பிரபலமான சுற்றுலா தலம்.
அன்று- எப்படியும் ஊரிலிருந்தும் பெற்றோர்களிடமிருந்தும் தப்பித்தாக வேண்டும். சிங்கப்பூர் போகிறேன் என்று பொய் சொல்லியாயிற்று. எங்கே போவது கூர்க்.. கேரளா.. என்று பல இடங்களை சுற்றி யோசனை போயிற்று.
கேரளா என்றால் எங்கே? ஆலப்புழா போட் ஹவுஸ்? வேணாம். அது ஹனி மூனுக்கு வெச்சுக்கலாம். மூணார்-இடுக்கி-தேக்கடி... கடைசியில் திருச்சூர் அருகே அதிரப்பள்ளி-வாளச்சார் என முடிவாயிற்று.
பெற்றோரை ஏமாற்றுகிற உறுத்தலைப் போக்க, பரிகாரம் செய்வதாய் நினைத்து முதலில் குருவாயூர்!
பிறகு திருச்சூரில் ரூம் எடுத்து- பாலுவின் அருகாமை அவளுக்கு இதம்! பதம்!
தப்பு செய்கிறோமோ.. என்கிற குற்ற உணர்வை மறக் கடித்து- அந்த நேரத்திற்கு பாலுவால் இருபத்தியிரண்டு வருடங்கள் கண்ணுக்கு கண்ணாக வளர்த்தவர்கள் அந்நியமாய் தெரிந்தனர். இவன் உயர்ந்து நெஞ்சை ஈர்த்தான். உன்னதம்! இளமையின் அறியாமை!
ரத்த ஊற்று திக்குத் தெரியாமல் அலை பாயவைத்தது. இவன் மட்டும் வாழ்நாள் முழுக்கப் போதும்-வேறு எவரும் வேண்டாம் என்கிற பிராந்தி. பிராந்து!
அவனை நினைக்கும் போதே உடல் ஜிவ்வென்றாகும். புத்துணர்ச்சி! உடன் ஓடிப்போய் கட்டிக்கொண்டு திணறடிப்பாள். அவன் எதிர்பாராத இன்ப தாக்குதலில் ஈடுகொடுக்க முடியாமல் திண்டாடுவான்.
பாலுவிற்கு அவள் பேரில் அலாதி அன்பு என்றாலும்கூட அதில் மிதவாதியாகத்தான் இருந்தான். ஏற்றுக்கொள்வான். ஆனால் அவளைப் போல ஆக்கிரமிக்கமாட்டான்.
அவன் லேப்டாப்பில் அலுவலக தலைவலியில் இருக்கும்போது திடீரென பாய்ந்து வந்து மடியில் அமர்ந்து, ‘உனக்கு என் மேல் கொஞ்சம் கூட அன்பில்லை!’ என்று முறைப்பாள்.
“இருக்கு. அது உனக்குத் தெரியாது. அதை உனக்கு எப்படி காட்டுறதுன்னு தெரியலை. அதை எனக்கும் சொல்லிக்கொடேன்!”
“நீயெல்லாம் ஒரு இளைஞனா... வெட்கமாயில்லே?” என்று இறுக்குவாள்.
“வெட்கமா.. அது இருந்தா காதல் வருமா! காதல் வெட்கம் அறியாதுன்னு சும்மாவா சொன்னாங்க..?”
“சரி.. என்னை விட ஒனக்கு வேலைதான் முக்கியம். கட்டிகிட்டு அழு!” என்று விலகுவாள். அவனுக்குள் அதீத மோகம் எழும். அது சுவீகாவுக்கே புரியும். கைகள் பரபரவென்றிருக்கும். நெஞ்சுக்குள் இனம் புரியாத வேகம். பக்.. பக்! மிதக்க வைக்கும் போதை!
அவன் 24 மணி நேரமும் தன்னையே சுற்றி வரவேண்டும் என்னும் தாகம் அவளுக்குள்! தன் முடியை வருடணும். சமைக்கும்போது எதிர்பாராமல் பின்பக்கம் வந்து கட்டிக்கொள்ள வேண்டும்! கட்டி, முடியை ஒதுக்கி, கழுத்துக்கு கீழ் சிலிர்க்க வைக்க வேண்டும்.
உடை மாற்ற உதவணும். கேட்காமலேயே டீ போட்டுத்தரணும். தலை வலித்தாலும்-வலிக்காவிட்டாலும் கூட நெற்றியை வருடணும். பார்க்கும்போது மடியில் அமர்த்திக்கொள்ள வேண்டும். சும்மான்னாலும் பைக்கில் சுற்றணும்! ஒன்று சேர்ந்து எண்ணெய் ஸ்நானம் செய்யணும்.
அடிக்கடி ஷாப்பிங் போகணும். வேணாம் வேணாங்கிற அளவுக்கு டிரஸ்கள்! அதற்கு மேட்ச்சான ஹான்ட் பேக்! செருப்புகள்! நகைகள்!
சலிக்காமல் சளைக்காமல் நகை தேர்வுக்கு துணை இருக்கணும். அந்த சமயம் எழுந்து நழுவி விடக்கூடாது..! கால் வலி பற்றி கவலைப்படாமல் நிற்கணும். இப்படி எத்தனையோ சிற்றின்பங்கள்! எதையும் விடக்கூடாது. அணு அணுவாய் அனுபவிக்கணும் என்பது அவளது ஆவேசம்!
அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
ஒன்றாய்- ஒரே ரூமில் ஒரே படுக்கை என்பதில் அவளுக்கு எந்த சங்கோஜமும் இல்லை. இவன் என்னவன்! எந்த எல்லையையும் தாண்டமாட்டான். சொன்னபடியெல்லாம் கேட்பான். ஆடுவான்!
அப்பா.. மாப்பிள்ளை பார்க்கிறாராம். யார் கேட்டார்களாம்! இவன் போல வேறு யார் வருவர்..?
பேரின்பம் ஒதுங்கிக் கொடுத்து அங்கே சிற்றின்பம் ஜில் கட்டுகிறது. செழிக்கிறது. கொழிக் கிறது. புத்திசாலி- நன்கு படிப்பவள். நல்ல ரேங்கிலேயே ஆர்வத்துடன் சுயமாய் படித்தவள். இப்போது புத்தி ஏன் இப்படி போகிறது?
அப்பா எனக்கு கெடுதலா நினைப்பார்? எவனாவது அயோக்கியனையா பார்த்து வைப்பார்? ஏன் இந்த திருட்டுத்தனம்?
அப்பா ஒன்றும் கொடுமைக்காரர் இல்லை. சொன்னால் புரிந்து கொள்வார். பாலுவைப் பார்த்தால் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்.
ஏற்றுக்கொள்ள முடியாததற்கு இவனிடம் என்ன குறை?
நல்ல குடும்பம். நல்ல பண்பு. நல்ல வேலை-திறமை-அன்பு-பாசம் பொழிகிறான். என்னை நேசித்துவிட்டது தவிர இவனிடம் வேறு எந்த கெட்டப் பழக்கமும் இல்லை.
இன்னும் சொல்லப் போனால் பெற்றோர்களுக்கு வேலை மிச்சம். மாப்பிள்ளை தேடும் அலைச்சல் மிச்சம். ஊர் உலகத்தில் வரன் பார்க்க வேண்டி எத்தனை கஷ்டப்படுகிறார்கள்? அந்த கஷ்டத்தை நான் குறைத்துள்ளதாக ஏன் அவர் எடுத்துக்கொள்ளக் கூடாது?
அப்பாவின் மேல் அவளுக்கு கோபமில்லை. அவரை எதிரியாக்கவில்லை.
எதிர்க்க வேண்டும்- அவரை புண்படுத்த வேண்டும் என அவள் நினைக்கவில்லை.
அப்பா..! சுவீகாவைப் பொறுத்தவரை நடமாடும் தெய்வம்! அத்தனை பிரியம். மகள் மேல் அவளுக்கு அத்தனை உருக்கம். நெருக்கம்.
சிறுமியாயிருக்கும்போது அவளுக்கு அதை புரிந்து கொள்ளத் தெரியாது. எல்லாவற்றிற்கும் பணிகிற - ஒத்துப்போகிறவரை வளைத்து, ஒடித்து பார்க்கும் முதிர்ச்சியின்மை. போதாதிற்கு நல்ல நிறம். வனப்பு! நன்றாக படிக்கவும் செய்வாள்.
அழகும் வனப்பும் அம்மா மூலம் கடவுள் கொடுத்தது. இதில் தன் திறமைக்கு இடமில்லை. இதற்கு சந்தோஷப்படலாமே தவிர- உரிமை கொண்டாட தனக்கு அருகதையில்லை என நினைப்பதில்லை.
ஊர் உலகத்தில் - போதுமான நிறம், முக அமைப்பு, முடி உயரம்.. இன்னும் வேண்டியதெல்லம் வேண்டியபடி இல்லாமல் - கிடைக்காமல் கவலைப்படுபவர்கள் எத்தனை பேர்!
நமக்கு எல்லாம் கிடைத்திருக்கிறது. வாய்த்திருக்கிறது. அதற்காக மகிழ்வோம். பெருமைப்படுவோம். செருக்கு கூடாது - என யோசனை போவதில்லை.
இரவில் திடீரென எழுந்து கொண்டு அழுவாள். அவர் பதறியடித்து
‘என்னம்மா.. என்ன கண்ணு..?’
‘எனக்கு ஐஸ்கிரீம் வேணும்!’ என்பாள்.
‘இந்த நேரத்திலா.. மழை வேறு பெய்யுது!’
‘வேணும்..’ என்று கால்களை உதறுவாள்.
‘அடிச்சேனா.. பார்.. ஐஸ்கிரீமாம்.. ஐஸ்கிரீம்..!’ என்று அம்மா முறைப்பாள்.
‘ஒழுங்கா தூங்கு!’
‘சுவீ.. இப்போ படுத்து தூங்கும்மா. காலையில் வாங்கித்தரேன்!’
‘இல்லை எனக்கு இப்பவே வேணும்’ என்று எழுந்து ஜன்னல் பக்கம் திரும்பி நின்று கொள்வாள்.அவளது விடைப்பும், பிடிவாதமும் அவருக்கு வலிக்கும்.. பாவம்.. சின்ன பெண் தானே..
உடனே சைக்கிள் எடுத்துக்கொண்டு மழையில் நனைந்து.. சினிமா கொட்டகைக்குப் போய் ஐஸ்கிரீம் வாங்கி வரும்போது அம்மாவின் அடிக்கு பயந்து சுவீகா தூங்கியிருப்பாள்.
அவர் அப்போதும் கோபப்படாமல் அவளை அரவணைத்து முத்தம் கொடுத்து, ஐஸ்கிரீமை பிரிட்ஜில் பாதுகாத்து, காலையில் கொடுத்தால்.. ‘அதுவா நான் எப்போ கேட்டேன்..?’ என்பாள்.
உடன் அம்மாவின் பிரஷர் ஏறும். ‘எல்லாம் உங்களால வர்றது! இவதான் சின்னக் குழந்தை.. விவரமில்லாமல் கேட்கிறாள்ன்னா.. நமக்கு அறிவு வேணாம்..? உடனே ஓட வேண்டியது! அப்புறம் காய்ச்சல் வந்து படுத்துக்க வேண்டியது’ அப்பாவை திட்டுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் அம்மா விடமாட்டாள்.
நமக்காக ஓயாமல்.. ஓடாய் உழைக்கும் பெற்றோர்களுக்கு நாம் திருப்பி என்ன செய்கிறோம்..?
சுவீகா கண்களைத் துடைத்து கொண்டு, முகம் கழுவி வந்தாள். மறுபடியும் அந்த டூர் மனதில் ஓட ஆரம்பித்தது.
அன்று குருவாயூர் முடிந்து திருச்சூரில் வசதியான ஓட்டலில் ரூம் எடுத்தார்கள். அங்கிருந்து ஒரு மணி நேரம் அதிரப்பள்ளி. ஓட்டல் மூலமே டாக்சி ஏற்பாடு செய்து-
பாலுவை - விட்டால் ஓடி விடுவான் என்கிற மாதிரியான பைத்தியக்காரத்தனத்துடன், அவனது கைகளை இறுக்கிக்கொண்டு பின்சீட்டில் கதகதப்பேற்றினாள்.
டாக்சிக்காரன் இருக்கிறான்- கவனிப்பான் - காது கொடுப்பான் என்பதையெல்லாம் யோசிக்காமல் அவள் அவனுடன் அன்னியோன்யம்!
பாலுவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எதிர்த்தால் எகிறுவாள். ஒருபக்கம் நல்ல படிப்பு-திறமை- மறுபக்கம் குழந்தைத்தனம். அதுதான் சுவீகா.
லேசான தூறலில் இரண்டு பக்கமும் பரவிக் கிடந்த பசுமையை ரசித்தபடி பயணித்தபோது- திடீரென-
டமால் என ஒரு சப்தம்.
“என்ன... என்னாச்சு..?”
அதற்குள் வண்டி தடுமாறி- இங்குமங்கும் கிறங்கி, முட்டிக்கொண்டு நிற்க- டிரைவர் இறங்கி குனிந்து பார்த்து, “சாரி சார். கியர் பெட்டி” என்று விசனப்பட்டான்.
அவர்கள், கதகதப்பை பறிகொடுத்து, கீழே இறங்கி லிப்ட்டுக்காக வண்டிகளை நிறுத்த பிரயாசைப்பட்டுக் கொண்டிருக்கும்போது-
கார் ஒன்று வந்து ஓரங்கட்டி நின்றது. அதில் பின் சீட்டில் அமர்ந்திருந்த வனப்பான பெண் கண்ணாடியை திறந்து, “என்ன பிரச்சினை?” என கேட்டு “வண்டில ஏறுங்க, நான் டிராப் பண்றேன்!” என்று அவர்களை ஏற்றிக்கொண்டாள்.
மருத்துவமனையில் கொலை செய்யப்பட்ட ரம்யாதான் அவள்!
(தொடரும்)