கரும்புச்சக்கையில் தயாராகும் தட்டுகள்
பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிப்பவை என்றாலும் அவைகளின் பயன்பாடு குறைந்தபாடில்லை. பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள் குவியல் குவியல்களாக குப்பைகளில் கொட்டப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிப்பவை என்றாலும் அவைகளின் பயன்பாடு குறைந்தபாடில்லை. பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள் குவியல் குவியல்களாக குப்பைகளில் கொட்டப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அவைகளுக்கு மாற்று பொருட்களை பயன்படுத்தும் முயற்சியில் களம் இறங்கி வெற்றி கண்டிருக்கிறார், சமன்வி போக்ராஜ். பெங்களூருவை சேர்ந்த இவர் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக கரும்பு சக்கையை மூலப்பொருளாக கொண்டு கப்புகள், தட்டுகளை உருவாக்கி இருக்கிறார். அவை பார்ப்பதற்கு பிளாஸ்டிக் பொருட்களை போல காட்சி யளிக்கின்றன.
“குப்பையில் வீசப்படுபவைகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக் பொருட்களாகத்தான் உள்ளன. அதிலும் பிளாஸ்டிக் கவர்கள், தட்டுகள், கப்புகள், ஸ்பூன்கள்தான் அதிக அளவில் இருக்கின்றன. அவைகளை அப்புறப்படுத்துவதும், அழிப்பதும் எளிதான காரியமல்ல. மேலும் அவை மக்காத பொருட்கள் என்று தெரிந்தும் அவைகளின் தேவை அதிகரிக்கத்தான் செய்து கொண்டிருக்கிறது” என்கிறார்.
சாப்பாட்டு மேஜையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் டைனிங் டேபிளை பிளாஸ்டிக் பொருட்கள்தான் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன. அவை சுற்றுச் சூழல் மாசுபடுவதற்கு முக்கிய அங்கம் வகிக்கின்றன என்பதை உணர்வுப்பூர்வமாக உணர்ந்த சமன்வி, அத்தகைய பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுப் பொருளை எப்படி தயார் செய்யலாம் என்று அலசி ஆராய்ந் திருக்கிறார். இறுதியில் கரும்பில் இருந்து ஜூஸ் பிழிந்தெடுத்த பிறகு குப்பையில் கொட்டப்படும் கரும்பு சக்கைகளை கொண்டு பொருட்களை தயாரிக்கலாம் என்பதை அறிந்தவர், அதனை செயல்படுத்த தொடங்கி விட்டார்.
இவருடைய நிறுவனம், கரும்பு சக்கைகளை கொண்டு தட்டுகள், கிண்ணங்கள், கப்புகள் மற்றும் டப்பாக்கள், பைகள் போன்றவற்றை உற்பத்தி செய்து வருகிறது.
“மக்களிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப் படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது சவாலான காரியம். மாற்றுப்பொருட்களின் விலையையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனெனில் புதிதாக தயாரிக்கப்படும் மாற்று பொருட்கள் குறைவான அளவிலேயே விற்பனையாகும். அதனால் பிளாஸ்டிக்கை விட அந்த பொருளின் விலை அதிகமாகவே இருக்கும். இதனால் மக்கள் விலை குறைவாக கிடைக்கும் பிளாஸ்டிக் பொருட்களை கைவிட விரும்பு வதில்லை. எனினும் கடந்த ஓராண்டாக எங்களுடைய பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. அதனால் முன்பைவிட அவற்றின் விலை சற்று குறைந்திருக்கிறது. மக்கள் அதிகமாக வாங்க தொடங்கும்போது விலை மேலும் குறையும்” என்கிறார்.
சமன்வியின் நிறுவனம் மாதம் சராசரியாக 15 லட்சம் பொருட்களை உற்பத்தி செய்கிறது. கரும்பு சக்கைகளால் தயாரிக்கப்பட்ட கப்பு கள், தட்டுகளை தொண்டு நிறுவனங்கள், ஓட்டல்கள், கடைகளுக்கு வாங்குகிறார்கள். இந்த பொருட்களின் தயாரிப்பு பணியில் பெண்களே அதிக எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதுபற்றி சமன்வி சொல்கிறார்:
“பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது என் நோக்கம். அவர்கள்தான் குடும்பத்தின் முதுகெலும்பு போன்றவர்கள். பொருளாதார ரீதியாக வலுவடைந்தால் அது அவர்களுடைய உயர்வுக்கு உதவும். அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பிளாஸ்டிக்குக்கான மாற்று பொருட்களை அதிக எண்ணிக்கையில் பயன்படுத்துவதற்கு ஏற்ப சந்தை விரிவாக்கம் அடைய வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நாம் சில ஆண்டுகளில் இந்த உலகை விட்டு சென்றுவிடுவோம். ஆனால் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பூமியுடன் ஐக்கியமாகாமல் சுற்றுச்சூழலை மாசுபடுத்திக்கொண்டே இருக்கும். ஆதலால் நாம் பயன்படுத்தும் பொருட்கள் பற்றி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் இன்று இருப்பதை விட சுற்றுச்சூழல் மேலும் மோசமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்கிறார்.