டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலி
பாகூர் அருகே உள்ள மணப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவருடைய மனைவி பாக்கியலட்சுமி (வயது 35). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.;
பாகூர்,
கடந்த சில நாட்களுக்கு முன்பு கொம்பாக்கத்தில் வசித்து வரும் பாக்கியலட்சுமியின் தந்தை மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பாக்கி லட்சுமி கலந்துகொண்டு ஊர் திரும்பினார். அதில் இருந்து காய்ச்சலால் அவர் அவதிப்பட்டு வந்தார்.
இதையடுத்து அவருடைய குடும்பத்தினர், புதுவையில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பாக்கியலட்சுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு டெங்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதற்கான அறிகுறி உள்ளது என தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பாக்கியலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.