காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம்
கிருஷ்ணகிரி நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி வைத்துள்ளனர்.;
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் கடந்த மாதம் 23-ந் தேதி நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் போது பேசிய தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதுடன், இந்த நகராட்சியுடன் கட்டிகானப்பள்ளி, காட்டிநாயனப்பள்ளி உள்ளிட்ட 8 கிராம ஊராட்சிகள் இணைக்கப்படும் என்று அறிவித்தார். இதற்கு காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று தங்களின் வீடுகளில் கருப்பு கொடி கட்டினார்கள்.
இது குறித்து அந்த பகுதி பொது மக்கள் கூறியதாவது:-
ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியை கிருஷ்ணகிரி நகராட்சியுடன் இணைத்தால், நாங்கள் நம்பியிருக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் நிறுத்தப்பட்டு, எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஊராட்சியாக உள்ள நிலையிலேயே எங்களால் ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்த முடியாத நிலையில் நாங்கள் உள்ளோம்.
தற்போது நகராட்சியுடன் இணைக்கப்பட்டால் இரட்டை வரி செலுத்தும் கட்டாயத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படும். இதனால் இந்த ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடும். இந்த ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறோம். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக குடிநீர் கூட சரிவர கிடைக்காத அளவிற்கு பருவமழை பொய்த்து போய் விட்டது.கிருஷ்ணகிரி நகராட்சியுடன் இணைத்தால் எங்களுக்கு மிகுந்த சுமை அதிகரித்து, எங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். எனவே, எங்கள் ஊராட்சியை கிருஷ்ணகிரி நகராட்சியுடன் இணைக்கும் முடிவை அரசு கைவிட வலியுறுத்தியும், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அனைத்து வீடுகளிலும் கருப்புகொடி ஏற்றி அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகிறோம். எனவே, அரசு, காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.