கிருஷ்ணகிரியில் தமிழ் மாநில விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் தமிழ் மாநில விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2017-10-07 22:45 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வறட்சியால் வேலை இழந்துள்ள விவசாய தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை உதவி பணம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். தினசரி குறைந்த பட்ச ஊதியமாக ரூ.400 வழங்க வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் நரசிம்மன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் லகுமய்யா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் சின்னசாமி, பூதட்டியப்பா, சீனிவாசன், பழனி, சிவராஜ், வெங்கடாசலம், ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்