கதிராமங்கலத்தில் 88–வது நாளாக காத்திருப்பு போராட்டம்
கதிராமங்கலத்தில் 88–வது நாளாக காத்திருப்பு போராட்டம்
திருவாலங்காடு,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அப்பகுதி மக்கள் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை கதிராமங்கலத்தில் இருந்து வெளியேற்ற கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று கதிராமங்கலம் மக்களின் காத்திருப்பு போராட்டம் 88–வது நாளாக நீடித்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:–
மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அதை உணர்ந்து செயல்பட அவர்கள் மறுப்பது வேதனையானது. அதிகாரிகள் மக்கள் நலனுக்காக பணிகளை கடமைக்கு தான் செய்கின்றனர். இதனால் தான் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் நிலை உள்ளது. இவ்வாறு அவர்கள கூறினர்.