வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கறவைமாடு வாங்குவதற்கு கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கப்படுமா?
வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கறவைமாடு வாங்குவதற்கு கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கப்படுமா? என பெரம்பலூர் அருகேயுள்ள ஈச்சம்பட்டி கிராம விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மலையடிவாரத்தில் எழில்மிகு தோற்றத்துடன் ஈச்சம்பட்டி கிராமம் அமைந்திருக்கிறது. ஒரு காலத்தில் ஈச்ச மரங்கள் இப்பகுதியில் அதிகம் விளைந்ததால் ஈச்சம்பட்டி என ஊருக்கு பெயர் வந்ததாக மக்கள் கூறுகின்றனர். இவர்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். இதனால் விவசாயத்தோடு சேர்ந்து கறவை மாடுகளையும் வளர்த்து பிழைப்பு நடத்துகின்றனர். கறவை மாடுகளிலிருந்து பால் கறந்து ஈச்சம்பட்டி மற்றும் மூலக்காடு பால்உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அளித்து வருகின்றனர்.
ஈச்சம்பட்டி கிராமத்தில் பல்வேறு தனியார் பால்பண்ணைகள் இருப்பினும், விவசாயிகளின் ஆதரவு தொடர்ந்து இருப்பதால் தான் அந்த 2 பால் உற்பத்தியாளர் சங்கங்களும் எளிதில் பால் கொள்முதல் செய்கின்றனர். அப்படி இருக்கையில் கறவை மாடுகளின் வயது முதிர்வு, வாழ்க்கை மேம்பாட்டுக்கான பொருளாதார தேவை உள்ளிட்டவற்றுக்காக புதிதாக கறவை மாடுகள் வாங்கு வதற்கு ஈச்சம்பட்டி கிராம விவசாயிகள், குரும்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பல முறை மனு கொடுத்துள்ளனர். ஆனால் சில நபர்களுக்கே கடன் வழங்கிவிட்டு மற்றவர்களை அலைக்கழிப்பதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஈச்சம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் நீண்ட நாட்களாக வாடகை கட்டிடத்தில் தான் இயங்கி வருகிறது. இதில் போதுமான வசதிகள் இல்லாததால் பால் உற்பத்தியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் இந்த கட்டிடத்தின் அருகே புதர் மண்டியிருப்பதால் விஷ ஜந்துகள் ஏதும் தங்களை கடித்து விடுமோ? என்கிற அச்சத்துடனேயே இங்கு அவர்கள் வந்து செல்ல வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் சங்கத்திற்கு அப்பகுதியிலுள்ள ஒரு இடத்தில் புதிய கட்டிடம் கட்ட சில லட்சங்கள் அரசு நிதி ஒதுக்கியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டிருப்பது பால் உற்பத்தியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஈச்சம்பட்டி கிராம விவசாயிகளுக்கு கறவை மாடு வாங்க கடன் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஈச்சம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ஈச்சம்பட்டி கிராம விவசாயிகள் கிருஷ்ணன், ராஜூ, சின்னசாமி உள்ளிட்டவர்களிடம் கேட்ட போது, எங்களுக்கு கறவை மாடு வாங்க கடன் வழங்கப்பட்டால் சங்கத்திற்கு பால் கொள்முதல் அதிகரிக்கும். எங்களின் பொருளாதார தேவையும் பூர்த்தி அடையும். கூட்டுறவுத்துறை அதி காரிகள் கடன் வழங்க தாமதப்படுத்துவது ஏன்? என்பது குறித்து நாங்கள் கேட்ட போது தொகை ஒதுக்கப்பட்டு வந்ததும் வழங்கி விடுகிறோம் என கூறி சமாளிக்கின்றனர். மற்றபடி பால் கொள்முதல் பணத்தை தவறாமல் வழங்குகின்றனர். கடன் பெறுவது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் பல முறை மனு கொடுத்தும் எவ்வித பலனும் இல்லை. எனவே கடந்த ஆண்டு வறட்சியால் ஏற்பட்ட பாதிப்புகளை ஈடு செய்யும் பொருட்டு தற்போது கறவை மாடு வாங்க கடன் வழங்கப்பட்டால் மகிழ்ச்சி தான். விவசாய தேவைகளுக்காக உரங்களையும் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று கூறினர்.