எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா 26-ந் தேதி நடக்கிறது பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்பு
திருச்சி பொன்மலை ஜி-கார்னர் மைதானத்தில் வருகிற 26-ந் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது. இதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.;
திருச்சி,
திருச்சியில் வருகிற 26-ந் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதனையொட்டி பொன்மலை ஜி-கார்னர் மைதானத்தில் விழாவுக்கான பந்தக்கால்நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து விழா தொடர்பான ராட்சத பலூனை பறக்க விட்டனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். ரத்தினவேல் எம்.பி. முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசியதாவது:-
மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா, இந்த ஆண்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் வருகிற 26-ந் தேதி பொன்மலை ஜி-கார்னர் மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது.
விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம், விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், மின்னணு விளம்பரத்திரையின் மூலம் எம்.ஜி.ஆர். தத்துவப் பாடல்கள், திரைப்படங்கள், அரசின் சாதனை விளக்க திரைப்படங்கள், சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி ஆகியவை தொடர்ந்து நடைபெற உள்ளது.
விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார். இதில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள். திருச்சியில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் 2 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், பரமேஸ்வரி முருகன், முன்னாள் அமைச்சர் கே.கே.பாலசுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கணேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, மாநகராட்சி நகர பொறியாளர் அமுதவள்ளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.