புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

திருச்சி,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட செயலாளர் கென்னடி வரவேற்றார். பொதுச்செயலாளர் அன்பரசு, மாநில பொருளாளர் தங்கராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்த வாக்குறுதியின்படி, சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலர், கிராம உதவியாளர் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ-ஜியோ அமைப்பு எடுக்கக்கூடிய அனைத்து முடிவுகளையும் ஏற்று முழுமையாக செயல் படுத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.