ஈரோடு மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்

ஈரோடு மாவட்டத்தில் தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்து வருகிறார்கள்.

Update: 2017-10-07 22:00 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்து வருகிறார்கள். இந்த நிலையில் ஈரோடு ஒன்றிய தே.மு.தி.க. முன்னாள் செயலாளரும், நசியனூர் பேரூராட்சி உறுப்பினருமான டி.என்.ஏ.ஆனந்த் தலைமையில், நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். புதிதாக தி.மு.க.வில் இணைந்த அவர்களை, மு.க.ஸ்டாலின் மற்றும் ஈரோடு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

இதுகுறித்து டி.என்.ஏ.ஆனந்த் கூறுகையில், ‘என்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்ட செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தே.மு.தி.க.வில் இருந்து விரைவில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விலக்கி தி.மு.க.வில் இணைக்கும் பணியை மேற்கொள்ள உள்ளேன். ஈரோடு மாவட்டத்தை தி.மு.க.வின் லட்சிய கோட்டையாக மாற்ற பாடுபடுவேன்’ என்றார்.

மேலும் செய்திகள்