சுகாதார சீர்கேட்டை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி பெரிய கலையம்புத்தூர் பகுதியில், கடந்த 15 தினங்களுக்குள் மர்ம காய்ச்சலால் 2 பெண்கள் பலியானாளர்கள்.
நெய்க்காரபட்டி,
பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி பெரிய கலையம்புத்தூர் பகுதியில், கடந்த 15 தினங்களுக்குள் மர்ம காய்ச்சலால் 2 பெண்கள் பலியானாளர்கள். இதற்கு நெய்க்காரப்பட்டி பேரூராட்சி பகுதியில் நிலவும் சுகாதாரக்கேடு தான் காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனை கண்டித்தும், பேரூராட்சி பகுதியில் அடிப்படை வசதியை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் நெய்க்காரப்பட்டி பஸ்நிறுத்தம் அருகே பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சுகாதாரமான தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும். பேரூராட்சி பகுதியில் கட்டப்பட்ட சுகாதார வளாகங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பேரூராட்சி அலுவலகத்தில் நீண்டகாலமாக பணிபுரியும் அலுவலர்களை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் கோஷங்களை எழுப்பினர்.