அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி பறிமுதல்

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே ஏலாக்குறிச்சியில் திருமானூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றிலிருந்து லாரி மூலம் சிலர் மணல் அள்ளி கொண்டிருந்தனர்.

Update: 2017-10-07 21:45 GMT

திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே ஏலாக்குறிச்சியில் திருமானூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றிலிருந்து லாரி மூலம் சிலர் மணல் அள்ளி கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அந்த நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்