தேசிய தபால் வார விழா நாளை தொடங்குகிறது

தேசிய தபால் வார விழா நாளை முதல் 6 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

Update: 2017-10-07 20:30 GMT

நெல்லை,

தேசிய தபால் வார விழா நாளை முதல் 6 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

தபால் வார விழா

இந்திய தபால் துறையின் தபால் வார விழா நாளை (திங்கட்கிழமை) முதல் 14–ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை நெல்லை, பாளையங்கோட்டை மற்றும் அம்பை தலைமை தபால் நிலையங்களிலும், களக்காடு மற்றும் வள்ளியூர் துணை தபால் நிலையங்களிலும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

10–ந் தேதி அனைத்து தபால் நிலையங்களிலும் சிறுசேமிப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறு சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

விழிப்புணர்வு கருத்தரங்கு

11–ந் தேதி தபால் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய தபால் ஆயுள் காப்பீடு முகாம்கள் நடைபெற உள்ளன. 12–ந் தேதி தபால் தலை சேகரிப்பு தினத்தையொட்டி பாளையங்கோட்டை மேரி சார்ஜென்ட் மேல்நிலைப்பள்ளியில் தபால் தலை சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற உள்ளது.

13–ந் தேதி வணிக வளர்ச்சி தினத்தையொட்டி தபால் துறையின் வணிக சேவைகள் பற்றி வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. 14–ந் தேதி பள்ளிக்கூட குழந்தைகளை தபால் நிலையங்களுக்கு அழைத்து வந்து தபால் சேவை குறித்து விளக்கி கூற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை நெல்லை கோட்ட முதுநிலை தபால் அலுவலக சூப்பிரண்டு ராமசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்