வெண்ணந்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி பலி
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் 5-வது வார்டு காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் தறித்தொழிலாளி குமரேசன் (வயது 40). இவரது மனைவி கலா.
வெண்ணந்தூர்,
இவர்களுக்கு ராமானுஜம் (8) என்ற மகனும், சுபஸ்ரீ (7) என்ற மகளும் இருந்தனர். வெண்ணந்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் மகன் 4-ம் வகுப்பும், மகள் 3-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்நிலையில் சுபஸ்ரீ கடந்த 4 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்துள்ளாள். அவளுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து வெண்ணந்தூர் அரசு மருத்துவமனையில் சிறுமி சுபஸ்ரீ அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுபஸ்ரீ உயிரிழந்தாள்.
மேலும் அதே பகுதியை சேர்ந்த செல்வம் மகன் கோகுலன் (1), நரேஸ் மகன் சபரி (7), சர்வேஸ் (5) மற்றும் ராஜ் (45) உள்ளிட்ட 4 பேரும் காய்ச்சல் காரணமாக சேலம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியினர் அச்சத்தில் உள்ளனர்.