சேலம் நெடுஞ்சாலைநகரில் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் வரவேற்பு

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தர்மபுரியில் இன்று (சனிக்கிழமை) மாலை நடக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று மாலை

Update: 2017-10-07 00:15 GMT
சேலம்,


 சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் அங்கிருந்து இரவு 7 மணிக்கு காரில் புறப்பட்டு சேலம் நெடுஞ்சாலைநகரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். வரும் வழியில் மாவட்ட எல்லையான சங்ககிரியில் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சேலம் நெடுஞ்சாலைநகரில் உள்ள அவரது வீட்டிற்கு இரவு 9.15 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டது.

அங்கு சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாசலம் எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம் எம்.பி., சக்திவேல் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆர்.ஆர்.சேகரன், எம்.கே.செல்வராஜ், முன்னாள் மேயர் சவுண்டப்பன் ஆகியோர் சால்வை வழங்கி வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் சரவணன், சண்முகம், யாதவமூர்த்தி, தியாகராஜன், ஜெ.பேரவை செயலாளர் சரவணமணி, முன்னாள் கவுன்சிலர்கள் மார்கபந்து, முருகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் கோவை மண்டல ஐ.ஜி. பாரி, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார், துணை கமிஷனர் சுப்புலட்சுமி மற்றும் அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். முன்னதாக டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான சேலம் மாநகர் மாவட்ட இணை செயலாளர் அனிதா, இளைஞர் பாசறை நிர்வாகி அரவிந்த் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவரது அணியில் தங்களை இணைத்து கொண்டனர்.

மேலும் செய்திகள்