சேலம் செவ்வாய்பேட்டையில் ரூ.50 கோடி மதிப்பிலான நிலம் காவல்துறைக்கே சொந்தமானது
சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள ரூ.50 கோடி மதிப்பிலான நிலம் காவல்துறைக்கே சொந்தமானது என்று கலெக்டர் ரோகிணி தீர்ப்பளித்தார்.
சேலம்,
சேலம் செவ்வாய்பேட்டை 30-வது வார்டுக்குட்பட்ட அப்சரா இறக்கம் அருகில் மாநகர போக்குவரத்து போலீஸ் நிலையம் இயங்கி வருகிறது. இங்குதான் உதவி கமிஷனர் அலுவலகமும் இயங்கி வருகிறது, இதன் எதிரே போலீசாரின் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த போக்குவரத்து போலீஸ் நிலையம் 70 சென்ட் பரப்பளவில் உள்ளது. இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.50 கோடி ஆகும். இந்த நிலமானது கடந்த 1907-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்படி, அரசால் எடுக்கப்பட்டு மாநகர காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.
அந்த நிலத்தின் வருவாய் ஆவணங்களை கே.ஆர்.சீனிவாசன், பி.வி.நாகராஜ் தரப்பினர் போலியாக தயார் செய்து, நிலத்தை அபகரிக்கும் நோக்கில், அந்த நிலத்தில் கட்டப்பட்டுள்ள போக்குவரத்து போலீஸ் நிலையத்தை அகற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதே வேளையில் மாநகர போலீஸ் தரப்பிலும் உரிய ஆவணங்களை தாக்கல் செய்து, அந்த நிலம் காவல்துறைக்கே சொந்தமானது என வக்கீல் மூலம் வாதாடினர்.
இந்த பிரச்சினை தொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர், நேரடியாக விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இது தொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி இருதரப்பினரையும் அழைத்து பேசினார். மேலும் நிலம் தொடர்பான ஆவணங்களையும் சரிபார்த்தார்.
இந்த நிலையில் நேற்று கலெக்டர் ரோகிணி, பிரச்சினைக்குரிய இடத்தை நேரில் சென்று தல ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அந்த நிலமானது 1907-ம் ஆண்டிலேயே முறைப்படி அரசால் கையகப்படுத்தி காவல்துறையின் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ரூ.50 கோடி மதிப்பிலான நிலம் மாநகர காவல்துறைக்கே சொந்தமானது என கலெக்டர் ரோகிணி தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.
மேற்கண்ட தகவல், சேலம் மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.