மணவாசியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி: உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் மறியல்
மணவாசியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலியானதால், இழப்பீடு வழங்கக்கோரி உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம்,
தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டெங்கு கொசு ஒழிப்பு பணி, குப்பைகள் அள்ளுதல், வீடு, வீடாக சென்று ஆய்வு பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் சுகாதார துறையினர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கரூரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் சிகிச்சைக்காக அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கடந்த சில நாட்களாக அதிகமாக வந்துள்ளனர். இதில் பலர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல காய்ச்சலுக்கு புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்பவர்களின் எண்ணிக்கை யும் அதிகமாக உள்ளது.
கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மணவாசியை சேர்ந்தவர் பிரித்திவிராஜ். இவருடைய மகள் பூஜா(வயது 4). இவள் கடந்த ஒரு வாரமாக டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தாள். முதலில் கோவக்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூஜாவிற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் குளித்தலை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். பின்னர் குளித்தலையிலிருந்து கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூஜா மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். ஆனால்அங்கு சிகிச்சை பலன்இன்றி பூஜா நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தாள்.
இதையடுத்து பூஜாவின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்லும் வழியில் மணவாசியில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
மணவாசி ஊராட்சியில் சாக்கடையை தூர்வாராமல் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மேலும் மணவாசி மாரியம்மன் கோவில் அருகே உள்ள தரைமட்ட தொட்டி சுத்தம் செய்யப்பட்டு பல மாதங்கள் ஆவதால் தண்ணீரில் புழுக்கள் மிதந்து வருகிறது. இப்பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேடு குறித்து கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இறந்த குழந்தைக்கு அரசு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.