கொசு புழு உற்பத்திக்கு காரணமாக இருந்த வீட்டின் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
கொசு புழு உற்பத்திக்கு காரணமாக இருந்த வீட்டின் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும்,
திருச்சி,
குடிநீர் இணைப்பை துண்டித்தும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். டெங்கு காய்ச்சலுக்கு காரணமான கொசுக்கள் நல்ல தண்ணீரில் முட்டையிட்டு கொசு புழுக்களை உற்பத்தி செய்கின்றன. இதன் மூலமே கொசு அதிக அளவில் பரவுகிறது. எனவே இந்த கொசு புழுக்களை கண்டு பிடித்து அழிக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இதற்காக வீடு தோறும் ஆய்வு பணிகளையும் மேற்கொண்டு உள்ளனர். வீடுகளை ஆய்வு செய்யும்போது திறந்த நிலையில் உள்ள தூய தண்ணீர் சேமித்து வைக்கப்பட்ட கலன்கள், தொட்டிகள், டயர்கள், காலி டப்பாக்கள் ஆகியவற்றில் உள்ள சிறிதளவு தண்ணீரில் டெங்கு கொசு உற்பத்தியாகும் புழு கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீரங்கம் கோட்டம் 5 மற்றும் 8-வது வார்டு பகுதியில் தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் நேற்று 35 தெருக்களில் 7,850 வீடுகளில் டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுத்தல், வீடுகளில் உள்ள குப்பைகள், தேவை இல்லாத பிளாஸ்டிக் பைகள், டயர்கள் போன்ற இதர பொருட்களை அப்புறப்படுத்தி ‘அபேட்‘ மருந்து தெளித்து ,புகைமருந்து அடித்தனர். டெங்கு பாதிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்கள். இப்பணியை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் உதவிசெயற் பொறியாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
மாநகராட்சி நகர்நல அதிகாரி டாக்டர் சித்ரா 8-வது வார்டு பூசாரிதெரு பகுதியில் ஒரு வீட்டில் ஆய்வு செய்த போது தண்ணீர் தொட்டியில் டெங்கு கொசு புழு அதிக அளவில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு, உடனடியாக பணியாளர்கள் மூலம் அழிக்கப்பட்டது. இதனையொட்டி அந்த வீட்டின் உரிமையாளர் பழனியப்பனுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் அவரது வீட்டிற்கான குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.