அடையாறு மண்டலத்தில் டெங்கு விழிப்புணர்வு பேரணி
சென்னை அடையாறு மாநகராட்சி மண்டலத்துக்குட்பட்ட (மண்டலம்-13) அனைத்து கோட்டங்களிலும் டெங்கு ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
சென்னை,
அடையாறு மண்டலம் 177-வது கோட்டமான ஆதம்பாக்கத்தில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது. வட்டார துணை கமிஷனர் கோபால சுந்தரராஜன் தலைமையிலும், மண்டல அதிகாரி சம்பத்குமார், மாநகர கூடுதல் சுகாதார அதிகாரி டாக்டர் மகாலட்சுமி ஆகியோர் முன்னிலையில் நடந்த பேரணியில் மலேரியா பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், சாலை பணியாளர்கள் மற்றும் எம்.ஏ.சிதம்பரம் செவிலியர் கல்லூரி மாணவிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து கொசு மருந்தும் அடிக்கும் பணி, கழிவுகள் அகற்றும் பணி ஆகியவையும் மும்முரமாக நடந்தன. செவிலிய மாணவிகள் வீடு, வீடாக சென்று டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் ஆயுர்வேதா டாக்டர்களை கொண்ட மருத்துவ முகாம் நடந்தது. இதனைத்தவிர ரெயில்-பஸ் நிலையங்கள் உள்பட மக்கள் கூடும் இடங்களில் நிலவேம்பு குடிநீரும் வினியோகிக்கப்பட்டது.